பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தம்பி பகவதி திருமணம்


கரூரில் 2- 8- 42 முதல் சிவலீலா நாடகம் தொடங்கியது. நல்ல வருவாயும் இருந்தது. தம்பி பகவதிக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. சின்னண்ணா நாகர்கோவிலில் இருந்ததால் அங்கேயே பகவதிக்குப் பெண் பார்த்தார், பெரியண்ணாவும் நாகர்கோவில் சென்று பெண்ணைப் பார்த்து முடிவு செய்து விட்டுத் திரும்பினார். திருமணத்தேதி உறுதி செய்யப்பட்டது. கல்யாணக் கச்சேரியில் தமிழிசையே முழங்க வேண்டுமென நான் விரும்பினேன். மாலையில் இசையரசு எம். எம். தண்டபாணி தேசிகரின் இன்னிசையும் இரவில் திருமுருக கிருபானந்த வாரியாரின் வள்ளி திருமணம் கதையும் நடத்த முடிவு செய்தோம். தேசிகர் அப்போது காஞ்சீபுரத்தில் இருப்பதாக அறிவித்தேன். அறிஞர் அண்ணா அவர்களுக்குத் தந்தி மூலம் தகவல் அறிந்தேன். அவர் எங்கள் சார்பில் தேசிகர் அவர்களைச் சந்தித்துப் பேசி முடிவு செய்து கடிதம் எழுதினார். 1942 நவம்பர் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று கருருக்கு அருகிலுள்ள திருமுருகன் திருத்தலங்களில் ஒன்றான வெண்ணெய் மலையில் தம்பிபகவதிக்கும் திருவளர் செல்வி கஸ்தூரிக்கும் திருமணம் நடந்தேறியது.

கந்தலீலா

கரூரில் கந்தலீலா நாடகத்தை நல்ல முறையில் தயாரிக்கத் திட்டமிட்டோம். சின்னண்ணா நாகர் கோவிலில் இருந்ததால் புதிய நாடகத்தை உருவாக்கும் பொறுப்பினை நான் ஏற்றுக் கொண்டேன். யாக குண்டம்; திருச்செந்துTர் கோயில்; சுவாமி மலை; பழனி, சரவணப் பொய்கை, திருத்தணிகை மலை முதலிய காட்சிகளெல்லாம் புதிதாகத் தயாரிக்கப் பெற்றன. சிவபெரு மானின் விஸ்வரூபமும், நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்புப்