பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

456


நடக்க மாட்டார்கள் என்று கூறினேன். மகாநாடு அமைதியாக நடைபெற்றது. பல அரிய சொற்பொழிவுகள் நடைபெற்றன. இப்போது ராவ் பகதூர் சம்பந்த முதலியார், எம். கே. டி. பாகவதர், எம். என். எம். பாவலர் இவர்கட்கு முறையே நாடகப் பேராசிரியர், இசை நாடக ஒளி, நாடக மணி என்று பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டங்கள் வழங்கும் அதிகாரத்தைச் சர்க்கார் எனக்கு அளித்தால் நான் சர், திவான் பகதூர் போன்ற பட்டங்களே நமது நடிகர்களுக்கு அளிப்பேன். மேடுைகளிலே சிறந்த நடிகர்களின் சேவை பாராட்டப் பட்டு அவர்களுக்கு டாக்டர், நைட் போன்ற பட்டங்கள் அளிக்கப் படுகின்றன.

“மாநாட்டில் பேசிய பலரும் கூறியதைப்போல் சீர்திருத்த நாடகங்கள் நடத்தப் படவேண்டும். நண்பர் அண்ணாதுரை சக்திரோதயம் என்ற நாடகம் எழுதி நடித்துக் கொண்டுவருகிறார். அதைப்போல ஒன்று போதுமா? நூற்றுக்கணக்காக எழுதி நடிக்க வேண்டும். யாரும் நடிக்க முன் வராவிட்டால் நண்பர் அண்ணா துரை எழுதும் நாடகத்தில் நான் நடிக்கிறேன்.

இனி இம் மகாநாட்டை இவ்வளவு நன்முக நடத்திய நண்பர்களுக்கு என் நன்றியறிதலைக் கூறிக்கொண்டு என் முடிவுரையை நிறுத்திக் கொள்கிறேன்.”

தலைவர் முடிவுரைக்குப்பின் மாநாட்டுச் செயலாளர் டி. என். சிவதானு அவர்கள் நன்றி கூற மாநாடு முடிவுபெற்றது. மாநாடு முடிந்த சில நிமிடங்களில் ஒளவையார் நாடகம் தொடங்கிச் சிறப்பாக நடை பெற்றது. மாநாட்டில் கலந்து கொண்ட பெருமக்கள் அனைவரும் நாடகத்தை இறுதி வரையில் இருந்து ரசித்தார்கள். நாடகம் முடிந்ததும் மாநாட்டு வரவேற்புக் குழு சார்பில் எனக்கு ‘ஒளவை’ என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. அதற்குரிய வெள்ளிப் பேழையினை சர். ஆர். கே. சண்முகம் அவர்கள் வழங்கிப் பாராட்டினார். அப்போது,

“நான் என்வாழ்க்கையில் கண்ட நாடகங்கள் யாவற்றிலும் ஒளவை'தலைச்சிறந்த நாடகம். இந்த நாடகத்தை நான் காணத் தவறியிருந்தால் ஒரு அரிய சந்தர்ப்பத்தை இழந்திருப்பேன் . டி. கே. எஸ். சகோதரர்கள் ஒளவை நாடகத்தின் மூலம் தமிழ்