பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

459


தஞ்சையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. சிவாஜி நாடகம் மராத்தியில் வெளிவந்த சந்திர கிரகணம் என்ற நாடகத்தின் தழுவல் என்றும், டி. வி. இரத்தினசாமி அதைத் தன்னுடைய நாடகம் என்று சொல்லியிருப்பதாகவும் நண்பர் ஒருவர் எழுதி யிருந்தார், அத்தோடு மராத்தி மொழியிலுள்ள, சந்திர கிரகண்” நாடக அச்சுப் பிரதியையும் அனுப்பியிருந்தார். ஆனால் இந்தக் கடிதம் வந்தபோது ரத்தினசாமி தஞ்சையில் இருந்தார். பாலக்காட்டிலேயே மேற்படி நாடக உரிமையை எங்களுக்குக்கொடுத்து விட்டார். நாடகம் தயாரிக்கும் போது வருவதாகச் சொல்லிப் போனார். உண்மை தெரிந்தபின் நாங்கள் அவருக்குக் கடிதம் எழுதினோம். அதற்குப் பதிலே இல்லை. அதற்குள் சென்னை பிரபல கண் டாக்டர் டி. எஸ். துரைசாமி அவர்களிடமிருந்து மற்றொரு கடிதம் வந்தது, அதில் வீர சிவாஜி நாடகம் தனக்குச் சொந்தமானதென்றும் அதனுடைய முழு உரிமையையும் பல ஆண்டுகளுக்கு முன்பே மராத்தி நாடக ஆசிரியரிடமிருந்து தான் வாங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, நாடகக் கதை மராத்தி ஆசிரியருடையது. அதைத் தமிழில் எழுதியவர் தஞ்சை டி. வி. இரத்தினசாமி, தமிழ் நாடகத்தின் உரிமை யாளர் டாக்டர் டி. எஸ். துரைசாமி, வேடிக்கையாக இருக் கிறதல்லவா? கடைசியாக நாங்கள் டாக்டர். துரைசாமி அவர்களிடம் அனுமதி பெற்று அவருக்கு ‘ராயல்டி’ கொடுத்துதான் நாடகத்தை நடித்தோம். “டாக்டர் துரைசாமி உரிமைபெற்றது என்று கூடப் போடவில்லை. “நாடக ஆசிரியர் - டி. எஸ். துரைசாமி” என்றே விளம்பரத்தில் போட்டோம். இத்தனை குழப்பங் களுக்கிடையே புதிய நாடகம் அரங்கேறியது.

கதாநாயகனக இராஜேந்திரன்

நாடகத்தின் பெயர் வீர சிவாஜி என்றிருந்தாலும் உண்மை யில் நாடக நாயகன் ஜெயவந்த் என்னும் தளபதி தான். இந்தப்பாத்திரம் இராஜேந்திரனுக்குக் கொடுக்கப் பட்டது. அவர் கதாநாயகனாக நடித்த முதல் நாடகம் வீர சிவாஜி. ஜெயவந்த் பாத்திரத்தை அருமையாக நடித்தார். தம்பி பகவதி சிவாஜியாக நடித்தார். அவரது கம்பீரமான தோற்றம் சிவாஜிக்குப் பொருத்தமாக இருந்தது. குரல், நடை, உடையாவும் பகவதியை சிவாஜி