பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

463


“நேற்று மண்மாரி பொழியும் காட்சி ரொம்பப் பிரமாதம்!” என்று யாரோ பெரியண்ணாவிடம் சொன்னார்கள் போலிருக்கிறது. அந்தக் காட்சியைப் பார்க்க அவரும் ஆர்வத்தோடு வந்திருந்தார். காட்சி நடைபெற்றது. எங்கள் துரதிர்ஷ்டம் அன்று, காற்று கொஞ்சம் அதிகமாய் இருந்தது. மேலிருந்து மரத் துரள்களைத் தூவிய போது அது மேடையிலிருந்து சபைக்குப் பறந்து சென்றது. முன்னலிருந்த பக்க மேளக்காரர்கள் திண்டாடினார்கள். ஆர்மோனியம், மிருதங்கம், கிளாரிநெட், பிடில் ஆகிய இசைக் கருவிகளெல்லாம் மரத்துாள் புகுந்துகொண்டு அவர்களைத் திக்குமுக்காடச் செய்தது. நாடகம் முடிந்து சபையோர் வெளியே போகும்போது “மேடையில் பெய்ய வேண்டிய மண் மாரி நம்மீது பெய்து விட்டதே” என்று சபித்துக் கொண்டே சென்றார்கள். மண்மாரி மீது பெரியண்ணாவுக்கு ஒரே கோபம். “என்னடா இது மண்மாரி மீது நாடகம்? மேடை சபை எல்லாம் அலங்கோலப்படுத்தி விட்டீர்களே! இந்த நாடகம் இனி நமக்குத் தேவையில்லை. நீ எமகண்டம் பாடுவதைப் பார்க்கும் போது எனக்குப் பரிதாபமாக இருந்தது. வேண்டாம். இந்த அறம் பாடும் நாடகமே நமக்கு வேண்டாம். நாளையோடு நிறுத்தி விடுங்கள். இந்த மரத்துாள் மாரியும் நாளை வேண்டாம்” என்று சொல்லிவிட்டார். இதற்கு மேல் அப்பீல் ஏது?

இதற்கேற்றாற்போல் காளமேகம் கடைசி நாளன்று 29.2.1944 ஆம் தேதி இரவு 10 மணிக்கு எங்கள் சிற்றப்பா திரு. டி. எஸ். செல்லம்பிள்ளை அவர்கள் காலமானதாகத் தந்தி வந்தது. எல்லாம் சேர்ந்து நன்றாக உருவாகியிருந்த காளமேளம் நாடகத்தைத் தொடர்ந்து நடத்த வாய்ப்பின்றி நிறுத்தும் படியாக நேர்ந்தது.

பில்ஹனன்

திருச்சி வானெலி நிலையம் 29.8-1943ல் பில்ஹணன் நாடகத்தை ஒலிபரப்பியது. நாடகத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் பங்கு கொண்டார். எனவே அதனை ஆர்வத்தோடு கேட்டோம். நாடக உரையாடல்கள் நன்றாக இருந்தன. அதன் ஆசிரியர் ஏ. எஸ். ஏ. சாமி என்பதை அறிந்தோம். அவரோடு தொடர்பு கொண்டோம், வானெலி நாடகத்தை மேடை