பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

486


தங்களுக்கு ஒரு நாடகம் நடத்திக் கொடுக்க விழைகிறோம். அதை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கும் ஒரு வாரத்திற்குமேல் பதில் இல்லை. எனக்கு மிகவும் கவலையாகத்தான் இருந்தது. 10 நாட்களுக்குப் பின் ஒரு கடிதம் வந்தது.

“1945 ஜனவரி மாதம் 20ஆம் தேதி நடைபெறும் ராஜா பர்த்ருஹரி நாடகம் எனக்கு” என்று மட்டும் குறிப்பிட்டிருந்தது. நாங்கள் உடனே ஒப்புதல் அளித்தோம்.

திருச்சியில் 20-1-45இல் நடைபெற்ற ராஜா பர்த்ருஹரி முதல் நாடகம் புரட்சிக் கவினார் நிதிக்காகக் கொடுக்கப்பட்டது. கவிஞரே நேரில் வந்து அன்றைய வசூல் 1251ஐயும் பெற்றுக் கொண்டார். இரண்டு நாட்கள் திருச்சியில் தங்கினார். பில்ஹணனைப் பற்றி அவரிடம் பேச்செடுத்தேன். “அது சரிதாம்பா நடத்துங்க, நடத்துங்க” என்றார். பாண்டிச்சேரி சென்றபின், நாடகம் நடத்திக் கொடுத்ததற்கு நன்றி கூறிப் பெரியண்ணாவுக்கு ஒரு கடிதமும் தம் கைப் பட எழுதினார்.

கலைவாணர் கைது செய்யப்பட்டார்

திருச்சியில் சிவலீலா தொர்ந்து நடந்து கொண்டிருக்கும் பொழுது டிசம்பர் 29ஆம் தேதி தினமணியில் கலைவாணர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியினைப் படித்து அதிர்ச்சி யடைந்தோம். இலட்சுமிகாந்தன் என்னும் ஒருவர் இந்துகேசன் என்ற வார இதழை நடத்தி வந்தார். அவ்விதழில் கலைவாணர், தியாகரா பாகவதர் போன்ற விளம்பரம் பெற்ற பெரியார்களின் சொந்தநடவடிக்கைகள் பற்றிப் புரளியாக வாரந்தோறும் செய்தி வெளியிட்டு வந்தார். இவைபோன்ற பத்திரிகைகளை மஞ்சள் பத்திரிகைகள் என்று குறிப்பிடுவார்கள். இவ்வாறு வெளிவரும் மஞ்சள் பத்திரிகைகள் பெரும்பாலான பொதுமக்களை எளிதில் கவர்ந்து விடுகின்றன. இலட்சுமிகாந்தன் இதை ஒரு வியாபாரமாகவே செய்துவந்தார். உண்மையான கலைஞன் எவனும் இந்தப் புரளிகளைப்பற்றிக் கவலைப்பட மாட்டேன். நான் காரைச்குடியிலிருந்து சென்னைக்குச் சென்றிருந்த சமயம் கலைவாணரிடம் அதைப்பற்றி யாரோ கேட்டார்கள். “இலட்சுமிகாந்தனைச்