பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

507


பக்தியின் மூலக்கதையான பாணபுரத்து வீரன் நாடகாசிரியர் திரு வெ. சாமிகாத சர்மா அவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. பர்மாவில் இருந்தார். அப்போது அந் நாடகநூல்தடை செய்யப்பட்டிருந்த தால் அவரைத் தேடிப்பிடித்துச் சிறப்பிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிட்டவில்லை. எனவே, திருச்சியில் அந்தச் சிறப்பினச் செய்ய விழைந்தோம். காந்திஜியின் அன்றைய திருச்சி வருகை அதற்கு மேலும் உயர்வளிப்பதாக அமைந்தது. அன்றிரவு தேச பக்திநாடகம் நடைபெற்றது. அன்றைய வசூல் 1122-12.0 ஐயும் வெ. சாமிநாதசர்மா அவர்களுக்குக் காணிக்கையாகக் கொடுத் தோம். அன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காந்திஜியைத் தரிசித்தேன். ஏற்கனவே ஒருமுறை அடிகளை நாகர் கோவிலில் பார்த்திருக்கிறேன். என்றாலும் அன்று அவரைத் தரிசித்தது எனக்குப் புதிய உணர்வினைத் தந்தது.

தேசபக்தி நாடகம் முன்பெல்லாம் நடைபெற்றதைவிடச் சிறப்பான முறையில் இப்போது தயாரிக்கப் பெற்றிருந்தது. “ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே” என்ற பாடலைப் புதிதாகச் சேர்த்து, பாணபுரம் விடுதலை பெற்றபின் சிறுமியர் ஆடிப் பாடுவதாகக் கூட்டு நடனம் அமைத்திருந்தோம். இந்த நாட்டியத்தை அழகிய முறையில் தயாரித்திருந்தார். டி. என். சிவதாணு. நாமக்கல் கவினார் அவர்களின் ‘சுதந்திரம் இல்லாமல் இருப்பேனோ’ என்ற பாடலை முக்கியமான ஒரு கட்டத்தில் சேர்த்திருந்தோம்.

பேராசிரியர் வ. ரா.

தேசபக்திநாடகம் 19.2.46இல் நடைபெற்றபோது பிரபல எழுத்தாளர் பேராசிரியர் வ. ரா. அவர்கள் தலைமை தாங்கினார். நாடகத்தை ரசித்த அவர் பாராட்டிப் பேசுகையில், இப் படிப்பட்ட ஒரு புரட்சிகரமான நாடகத்தை 1931 முதல் நடித்து வரும் டி. கே. எஸ். சகோதரர்களை நான் எவ்வளவு பாராட்டினலும் போதாது.இந்த தேசம் விடுதலை பெற்றபின் சுதந்திர இந்தியாவில் இந்தக் கலைஞர்களெல்லாம் கட்டாயம் கெளரவிக்கப்படவேண்டும். என்றுகூறினார்.பேராசிரியர் வ.ரா. மிகப் பெரிய சிந்தனையாளர். அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது புதிய புதிய கருத்துக்களையெல்லாம் அயைாசமாகக் கொட்டுவார். அவருடைய எழுத்தோவியத்தை நான் முதலா