பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

510


எம்.கே. முஸ்தபா, குலதெய்வம் ராஜகோபால், சட்டாம்பிள்ளை வெங் கட்ராமன், சாயிராம், ஏ. ஆர். அருணாசலம் எம். எஸ். எஸ். பாக்கியம், கே. மனோரமா, ஆர். முத்துராமன் ஆகியோராவர்.

அறிஞர் அண்ணா சந்திப்பு

திருச்சியில் நாடகம் தொடங்கியபோது வீடு கிடைக்காமல் தியேட்டரிலேயே தங்கியிருந்ததாகக் குறிப்பிட்டேனல்லவா? சில மாதங்களுக்கு பின் தென்னுாரில் வீடு கிடைத்தது. இப்போது தென்னுாரில் வெண்ணெய் மலைச் செட்டியார் இல்லத்தில் குடி யிருந்தோம், 4-3-46இல் முற்பகல் 10 மணி இருக்கும். திடீரென்று அன்புத் தோழர் அறிஞர் அண்ணா அவர்கள் வந்தார். ஈரோடு நாடகக் கலை மாநாட்டுக்குப் பின்னங்களிடையே சந்திப்பு ஏற்பட வில்லை. கடிதத் தொடர்பும் நின்றுவிட்டது. எனவே, எதிர் பாராத அவரது வருகை எனக்கு வியப்பைத் தந்தது. நான் மகிழ்வோடு வரவேற்றுப் பேசினேன். “புதிய நாடகங்களையெல்லாம் தாங்கள் எப்போது பார்க்கப் போகிறீர்கள்? அந்தமான் கைதி, முள்ளில் ரோஜாவெல்லம் தங்களுக்கு நிரம்பப் பிடிக்கும். திராவிட நாட்டில் அவற்றிற்கெல்லாம் விமர்சனம் வரவில்லையே. ஏன்?” என்று கேட்டேன். வேலைகள் அதிகமாகி விட்டதென்றும், இப்போதெல்லாம் ஒய்வே கிடைக்கவில்லையென்றும் கூறினார். கே. ஆர். இராமசாமிக்கு நாடகம் எழுதிக் கொடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன். எங்களுக்குத்தான் அந்தப் பேறு கிடைக்கவில்லை. ஆலுைம் பரவாயில்லை. எங்கள் ராமசாமிக்குத் தானே கொடுக்கிறீர்கள்! தங்கள் நாடகம் அமோகமாக வெற்றி பெற இறைவனே வேண்டுகிறேன் என்றேன். இறைவனை வேண்டுவதைவிடத் தோழர் ராமசாமியை வேண்டினல் பய னுண்டு. நாடகத்தை நனருக நடத்தும்படி கே. ஆர். ஆருக்கு எழுதுங்கள்’ என்றார். ஏறத்தாழ இரண்டு மணிநேரம் பல்வேறு விஷயங்களைப்பற்றி பேசிகொண்டிருந்துவிட்டு விடை பெற்றுச் சென்றார். நீண்ட காலத்திற்குப்பின் அண்ணா அவர்களைச் சந் தித்தது எனக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.

கிருஷ்ணன் நாடக சபா

நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி தஞ்சையில் ஒரு நாடக சபையைத் தொடங்கினார். சிறையிலிருக்கும் கலைவாண