பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

523


நாடகம் பார்த்தேன். நாடகத்தின் ஆசிரியர் திரு. ஏ. கே. வேலன் அவர்கள் இந்த நாடகத்திலும் வசன நடை எழுச்சி வாய்ந்த தாக இருந்தது. நண்பர் கே. என். இரத்தினமும், திரு. ஏ. கே. வேலனும் விரும்பியபடி அன்று நாடகத்திற்குத் திண்டுக்கல் தலைமை தாங்கி தேவி நாடக சபாவை மனமாரப் பாராட்டி விட்டுத் திரும்பினேன்.

சுதந்திரத் திருநாள்

1947 ஆகஸ்டு 15ஆம்நாள். ஆங்கில ஏகாதிபத்தியம் ஒன்றுபட்ட இந்தியாவை பாகிஸ்தான் இந்தியா என்று இரு கூறுகளாகப் பிரித்துவிட்டு வெளியேறியது. சுதந்திரத் திருநாள் இந்தியா முழுதும் பட்டி தொட்டிகளிலெல்லாம் கொண்டாடப் பெற்றது. திண்டுக்கல்லில் விடுதலை விழாவினைக் கோலாகலமாகக் கொண்டாடினோம் வெள்ளை ஏகாதிபத்தியம் வெளியேறும் இந்த மகத்தான விடுதலைத் திருநாளைத் துக்ககாள் என்று கொண்டாடினார் பெரியார் ஈ.வே. ரா. இன்ப நாள் என்று கொண்டாடினார் அறிஞர் அண்ணா. அண்ணா அவர்களும் பெரியார் ஈ வே. ரா அவர்களும் தலைவர் ம. பொ. சி. அவர்களும் திராவிட நாடு, விடுதலை, தமிழ் முரசு ஆகிய இதழ்களில் இந்தச் சுதந்திரத் திருநாளைப்பற்றி எழுதியுள்ள தலையங்கங்களை நாங்கள் அனைவரும் ஆர்வத்தோடு படித்தோம். தலைவர் ம. பொ. சி., அறிஞர் அண்ணா ஆகியோரின் கருத்துரைகள் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தன. இருவரும் ஒன்று சேர வேண்டுமென்று என்னுடைய ஆர்வத்தை வெளியிட்டு இரு அறிஞர்களுக்கும் நீண்ட கடிதங்கள் எழுதினேன். சுதந்திரத் திருநாளன்று திண்டுக்கல் நகர முழுவதும் விழாக் கோலம் கொண்டிருந்தது, நான் தரகுமண்டி குமாஸ்தாக்கள் சங்கத்திலும் மற்றும் மூன்று இடங்களிலும் சுதந்திரக் கொடியினை ஏற்றி வைத்துப் பேசினேன். அன்று நடைபெற்ற எங்கள் சிவாஜி நாடகத்தில் இந்த மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் முறையில் தக்க இடங்களில் வசனங்களைச் சேர்த்துப் பேசி ரசிகப் பெருமக்களின் பாராட்டுதல்களைப் பெற்றோம்.

திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1946ஆம் ஆண்டிலேயே திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிந்து, திருவிதாங்