பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

525


புரம் அரசரின் மைத்துனார் திரு அமிர்தசாமி பங்களாவில் தங்கினோம். மாலையிலும் இரவிலும் இசைவாணி திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி, இசையரசு திரு எம். எம். தண்டபாணி தேசிகர் ஆகியோரின் இன்னிசை அமுதினைப் பருகினோம். மக்கள் வெள்ளம் போல் குழுமியிருந்தனார். ஒரே நெருக்கடி; வரவேற்புக் குழுவினரால் கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை. தமிழ்நாடே எட்டைய புரத்திற்குள் இருப்பது போன்ற ஒரு பிரமை எனக்கு ஏற்பட்டது. முதல் நாள் விழா முடிந்து நாங்கள் உறங்குவதற்கு இரவு மூன்று மணி ஆயிற்று.

மறுநாள் அதிகாலையில் எழுந்து பாரதி மண்டபத் திறப்பு விழாவில் கலந்து கொண்டோம். தலைவர் இராஜாஜி அவர்கள் அப்போது வங்காளத்தின் கவர்னராக வந்து விழாவில் கலந்து கொண்டார். கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எல்லோரையும் வரவேற்று மிக அருமையாகப் பேசினார். தலைவர் ம. பொ. சி. தோழர் ப. ஜீவானந்தம் ஆகிய இருவரின் பேச்சும் உணர்ச்சிக் கனலாக அமைந்தன.

ஜெய பேரிகை கொட்டடா!

அன்றைய விழாவில் பாட வேண்டுமென்று என் உள்ளம் துடித்தது. முன்னால் சிலர் பாடினார்கள். அவர்கள் பாட்டிலே இனிமையிருந்தது; இசைத்திறன் இருந்தது; ஆனால் பாரதி பாடல்களுக்குத் தேவையான எழுச்சியும் உணர்ச்சியும் இல்லை. நான் கீழே அமர்ந்திருந்தேன். பாரதி பாடல்களை நான் பாடுவதைக் கேட்ட நண்பர்கள் சிலர் பக்கத்திலே இருந்தனார். அவர்கள் என்னைப் பாடும்படியாகத் தூண்டினார். என்னல் அமைதியாக, உட்கார்ந்திருக்க முடியவில்லை. நேராக எழுந்து மேடைக்குச் சென்றேன். தலைவர் இராஜாஜியை வணங்கி விட்டு “நான் ஒரு. பாரதி பாடலைப்பாட அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டேன். அப்போது இராஜாஜிக்கு நான் அறிமுகமில்லாதவன். அவர், “இல்லையில்லை, நேரமில்லை. இனி அனுமதிப்பதற்கில்லை” என்றார். நல்லவேலையாகத் தலைவர் திரு காமராஜ் அவர்கள் இராஜாஜியின் அருகில் இருந்தார். அவர் என்ன அறிந்தவராதலால், “ஷண்முகம் பாரதி பக்தர்; நன்றாகப்பாடுவார்; பாடச்சொல்லுங்