பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

556

மான ஒரு பெட்டி செய்யப்பட்டது, தமிழ்நாட்டிலிருந்து வட நாடு சென்று இமயத்தின் உச்சியில் வில், புலி, கயல் சின்னங்கள் பொறிக்கும் காட்சியை அந்தப் பெட்டியிலேயே மின்சாரத்தின் துணையோடு அவர் செய்து காண்பித்தார். நாடக ஆரம்பத்தில் அதைப் பயன்படுத்திக் கொண்டோம். விளக்குகள் அணைக்கப் பட்டதும் அரங்கில் தமிழ் நாடு ஒளிக்கோடுகளாகக் காட்சி யளிக்கும். இமயத்தில் நாம் என்ற பாடல் தொடங்கியதும் படிப்படியாக அந்த ஒளிக்கோடுகள் விரிந்து பரந்து இமயம்வரை செல்லும். பாட்டு முடியும்போது இமயத்தின் உச்சியிலே மூவேந்தர்களின் வில்-புலி-கயல் சின்னங்களோடு தமிழ்க் கொடி ஒளிவடிவில் பறக்கும். இதனை மிக அற்புதமாகத் தயாரித்திருந்தார் விஸ்வேஸ்வரன்.

21-6. 48இல் இமயத்தில் நாம் முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவகாதம் அவர்கள் தலைமையில் அரங்கேறியது.

கி. அ. பெ அவர்களின் பேச்சு நாடகத்திற்குத் தெம்பூட்டுவதாக இருந்தது. தமிழ்நாட்டில் முதன்முதலாக நடைபெறும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்நாடகத்தை மக்கள் மகிழ்வுடன் வரவேற்றார்கள். முதல் நாடக வசூல் ரூ. 1222-00 ஆசிரியர் ரா. வே. அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பெற்றது. இமயத்தில் நாம் 87நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.

தமிழறினார்கள் தலைமை

தமிழறினார் பெருமக்கள் இவ்வரலாற்று நாடகத்தைக்கான வெளியூர்களிலிருந்தெல்லாம் வந்து குழுமினார்கள். 1-7-48இல் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களும், 11-7-48இல் திரு நாரண - துரைக்கண்ணன் அவர்களும், 24-7-48 இல் சென்னைப் பல்கலை கழக தமிழ் ஆராய்ச்சி துறைத் தலைவர், ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களும், 25-7-48 இல் தேசபக்தர் சி.பி. சுப்பையா அவர்களும், 1-8-48இல் விருதுநகர் வி.வி. இராமசாமி அவர்களும், 2-8-48இல் கோவைக் கிழார் சி. எம். இராம சந்திரன் செட்டியார் அவர்களும் தலைமை தாங்கி, இது போன்ற வரலாற்று நாடகங்களுக்கு அரசினார் மானிய உதவி வழங்கி ஆதரிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்கள்.