பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.சி. பி. சிற்றரசு,

9


ஒரே ஒருவன்தான் முன் வரமுடியும். ஒப்பற்ற உள்ளப் பண்பு படைத்தோர் மந்தையாக இரார். ஒரே ஒருவன் தான். அவன்தான் ஏழைபங்காளன் எமிலி ஜோலா. பிரெஞ்சு நாடு மெளனம் சாதித்தபோது ஜோலா உண் மையை உரைத்தான், டிரைபஸ் குற்றமற்றவன் என்று. எமிலி ஜோலாவுத்குத் தவிர வேறு யாருக்கும் அந்த உறுதியான உள்ளம் இருக்கமுடியாது. அநீதி பெ ரு நெ ரு ப் பென க் கொழுந்துவிட்டெரியும்போது அதனே அனேக்கத்துணிவது அனேவருக்கும் சாத்திய மான காரியமல்ல. ஜோலாவால் முடியும்; ஜோலா அப்படிப்பட்ட ஆற்றல் படைத்தவன். வழக்காடின்ை ஜோலா டிரைபசுக்காக வாழ்க்கை முழுதுமே வறியோ ருக்காகப் போராடிய வீரன். தனக்காகப் போராடும்ப்டி டிரைபஸ் ஜோலாவைக் கேட்டுக்கொள்ளவில்லை. அவன் (டிரைபஸ்) அநீதிக்காரர்களால் அவதிக்குள்ளானுன் என்று அறிந்தான். ஆவேசம் பெற்ருன். ஆற்றல் முழுவதையும் செலவிட்டான். நீதி வெளிவந்தது. வேண்டுகோள் 29-11-1897-ல் பிகோரே (Pigar) பத்திரிகையில் ஜோலா விடுத்த வேண்டுகோள் எந்தச் செய்தியையும் ஆழ்ந்து சிந்திப்பதுதான் மனிதனுடைய கடமை. எதிலும் ஒரு அவசர முடிவுக்கு வரக்கூடாது. ஆத்திரத்தின் அடுத்த தம்பி அவசரம். இரண்டும் மூர்க்கத்தனமாக நம்மைத்தாக்க வரும் போது நிதானம் சற்று ஒதுங்கிவிடும். அவை இரண்டும் உடலிலேயே உடன் பிறந்து கொல்லும் வியாதி. ஆகவே எதையும் அலட்சியமாக விட்டுவிடக் கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/10&oldid=1503495" இலிருந்து மீள்விக்கப்பட்டது