பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 எமிலி ஜோலா ஜோலா : பத்திரிகையில் போடமாட்டார்கள் என் கிருய். அவ்வளவுதானே ? - செஸா : ஆமாம். 'ஜோலா போகட்டும், கையில் காசிருந்தால் துண்டு அறிக்கைகள் வெளியிடுவோம். அதுவும் இல்லே யானுல் கூரைமேல் ஏறிக் கத்துவோம். போ, போ. போய் உன் வேலையைப் பார். இந்த ஜோலா இன்னும் இறந்துவிடவில்லை. இவன் பேணுவின் மை வற்றிவிடவில்லே. உணர்ச்சி குன்றிவிடவில்லே. இவன் உள்ளத்திலிருக்கும் உண்மை வெகுதுர்ம் ஒடிவிடவில்லே, (என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கண்கள் சிவந்துவிட்டன.) செஸ்ானே போராட்டத் தீயில் தீவிரமாகக் குதித்து விட்டேன். என் பெருமை பொருந்திய பிரெஞ்சு நாட்டின் அழிவைத் தடுக்க நான் அழியப் போகின் றேன். என் உயிரிருக்கும்வரை நீதி க்கா கப் போரிட்டே தீருவேன். - இளமைக்கு வேண்டுகோள் 34–12–1897. துண்டு அறிக்கை. எழில் திகழும் இளமையே! வருங்கால ஆட்சி பீடமே ! ஏன் வாளாயிருக்கின்ருய் ? போ. விரைந்தோடு. கவலேயற்று உறங்கிக் கிடக்கும் அனேவரையும் எழுப்பு. அலங்கோலமாக நடந்துகொண்டிருக்கும் ஆட்சி முறை யைத் திருத்து. நீண்ட தூக்கத்திலாழ்ந்து கிடக்கும் உன் தாயகத்தின் கதவுகளைத் தட்டு. அதன் கெனர் வத்தைத் திருடிக்கொண்டு ஓடும் திருடர்களைப் பிடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/25&oldid=759912" இலிருந்து மீள்விக்கப்பட்டது