பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 எமிலி ஜோலா எதற்கும் அஞ்சாது வீறிட்டு வெளியே வா! சன்மார்க் . கம் தழைக்க உன் சாவையாகிலும் காணிக்கையாகத் தா. செத்துக்கொண்டிருக்கும் உன் தாய்நாட்டிற்கு மரண மூச்சளிக்க ரத்ததானம் செய்ய மார்தட்டி முன்னே வா! என்று உன்னே என் மனமார அழைக்கின்றேன். மனிதாபிமானி, ஜோலா. சந்திப்பு ஜோலா தன் அறையில் உட்கார்ந்து ஆவேசமாக எழுதிக்கொண்டிருக்கின்றன். வேலைக்காரன் உள்ளே வந்து, வெளியே ஜோலாவின் பேட்டிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் டிரைபஸின் சகோதரன் மேத்யூ டிரை பஸ், டிரைபஸின் மனைவி ஆகிய இருவர்களின் பெயர் பொறித்த துண்டுச் சீட்டைக் கொண்டுவந்து கொடுக் கின்றன். உள்ளே அனுமதித்து, அவர்கள் வந்த செய் தியை வினவ, தன் சகோதரன் குற்றமற்றவன் என்று. நிரூபிப்பதற்கான பல ஆதாரக் கடிதங்களை ஜோலா விடம் ஒப்படைக்கின்ருர்கள். பலநாள் சிந்தித்த விஞ்: ஞானி ஒரு அதிசயப் பொருளைக் கண்டுபிடித்ததைப் போல முகமலர்ச்சி கொள்கின்றன். கிட்ைத்த ஆதாரங்’ களால் எப்படியும் டிரைபலை விடுவிக்க முடியும் என்ற புது நம்பிக்கையைப் பெறுகின்ருன். இரும்டில் கிணற். றில் விழப் போனவனுக்கு ஒரு மின்னல் வெளிச்சம் கிடைத்ததைப்போல தனக்குக் கிடைத்த ஒரு சில ஆதாரங்களேக் கொண்டே நாட்டையும், நீதியையும். டிரைபலையும் காப்பாற்றிவிட முடியும் என்று திடமாக நம்பின்ை. அந்த ஒரு அசையாத நம்பிக்கையால் டிரைபஸின் மண்விக்கு அளவற்ற ஆறுதல் கூறின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/29&oldid=759916" இலிருந்து மீள்விக்கப்பட்டது