பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

எமிலி ஜோலா


இருந்துவிடாதீர்கள். அவனுக்கு இழைத்திருக்கும் அநீதியை எண்ணி நாடு வேறு பக்கம் திரும்பி கண்ணிர் வடிக்கிறது. உங்கள் இருதயத் தூய்மையாக இந்த வழக்கை ஆராய்ச்சி செய்து பாருங்கள், நாட்டின் உயிரையே அந்த உத்தமனிடத்தில் ஒப்படைத்திருந்தோம். அந்த நம்பிக்கைக்குரியவனைத்தான் இன்று. நாயினுங்கேடாய் நடத்திக்கொண்டிருக்கிருேம். காலம் தன் பயங்கரக்கைகளே நீட்டிக்கொண்டிருக்கின்றது. கொடியவர்களே அது கொல்லப்போவது உறுதி. அந்தப் பட்டியலில் நீதிமான்களாகிய நீங்கள் தயவுசெய்து சேராதீர்கள், ஆகவே இந்தக் கறைபடிந்த வழக்கில் நல்லதையும் நேர்மையையும் செய்ய நினையுங்கள். இவ்வளவும் சொன்னதற்காக நீங்கள் என்னத் தண்டிப்பீர்களாயின் நான் இன்னும் நல்லவனாய்விடுவேன். நான் உங்கள் பார்வைக்குக் கொடியவனாகத் தெரிகின்றேனா? இல்லை. நான் எந்த அரசியல் லாப வேட்டைக்கும் அடிகோலுட வனல்ல. நான் ஒரு சுதந்திர எழுத்தாளன். உண்மை விரும்பி. நாட்டின் நேசன். நல்லவர்க்கு நண்பன். நீதியின் தூதுவன் நேர்மையின் பாதுகாவலன். பொல்லாங்குக்குப் பகைவன். எந்தச் சமூக வாழ்வுக்காக வாழ்வை எவன் ஒப்படைக்கிருனே, அவன்தான் நான். நான் ஓர் ஏழை. நான் ஓர் இதாலியனல்ல. சில ரிக்கார்டுகளைப் பார்ப்பதற்காக என்னுடைய 52-வது வயதில் இதாலிக்குச் சென்றிருக்கின்றேன். நான் என்னு டைய பாதுகாப்புக்காக உயிர்வாழவில்லை. உங்களை இந்த சிக்கலான மனப் போராட்டத்திலிருந்து விடு விக்க முயற்சி எடுத்துக்கொண்டேன். ஒரு குற்றம் மற்றோர் குற்றத்துக்கு உயிரளித்து ஊக்கிவிட்டுவிடும்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/53&oldid=968367" இலிருந்து மீள்விக்கப்பட்டது