பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 55 மையிருக்கிறதோ, அதேபோல் ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு தனி மனிதன் எதிர்த்தான் என்பதை வெளி யுலகம் தெரிந்துகொண்டால் அப்போது பிரெஞ்சு நாட் டின் மேன்மை குன்றிவிடும் என்று நின்க்க இராணுவ நீதிமன்றத்துக்கு உரிமையுண்டு என்பதை ஜோல் மறுப் பதற்கில்லே. ஆகவே ஜோலா வழக்கில் டிர்ைபஸ் தண் டனயைச் சம்மந்தப்படுத்திப் பேசுவதை இனி நிர்ன் அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்து ஜோலாவுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 3000 பிராங்கு கள் அபராதமும் விதிக்கின்றேன்.' தீர்ப்பு வெளியானதுதான் தாமதம், முன்னேற்பாட் டின்படி ஜோவா கையில் விலங்கிடப்பட்டான். கடுங் , காவல் தண்டனை அடையச் சிறையிலே க்ள்ளப்பட் டான். ஒரு மெச்சத்தகுந்த இராணுவத்தலேவன் டெவில்ஸ் தீவில். அவனுக்காக எவ்விதக் கைம்மாறும் கருதாமல் வாதாட முன்வந்த ஒரு பரோபகாரி பாரிஸ் சிற்ைச்சாலையில். ஆதாரங்கள் கிடைக்காததால் வாதாட முடியாதவன் தீவில். போதிய ஆதாரங்களோடு நீதிமன்றத்தின்மேல் போர் தொடுத்த நிகரற்றப் போர் வீரன் சிறைச்சாலையில். வாள் வீரன் திவில், பேணு விரன் கம்பிக்குள். - - சட்டம் ஒரு வெள்ளே நூல். தூய்மையானதுதான் அது நீதிமன்றம் என்ற சாயப்பட்டறையில் யூத எதிர்ப்பு என்ற சாயம் தோய்க்கப்பட்டிருக்கிறது. சட் டம், அந்த நீதிமான்களே பேசவைக்க முடியாமல் வலி குன்றிவிட்டது. நீதிமான்கள், அவர்கள் நாவசைந்த பக்கமெல்லாம் சட்டத்தைச் சதிராடச் சொன்னர்கள். இருதயம் இருக்கவேண்டிய இடத்தில் இரும்பு இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/56&oldid=759946" இலிருந்து மீள்விக்கப்பட்டது