பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 5 தன் நெஞ்சத்தை வீழ்த்தின்ை. நீதியே! என் உயிர், உனக்கே அடைக்கலம், பதில் இல்லை. நீதி கிடைத் திருந்தால் அவன் ஏன் அந்த நீலக் கடலின் மத்தியிலே தள்ளப்படுகின்ருன். ஒரு குற்றமும் செய்யாத எனக்கா இத்தண்டன? நீதிக்காகப் போராடுபவர்கள் இல்லையா? நேர்மையின் சின்னங்களுக்கு நாட்டிலே பஞ்சம் ஏற் பட்டுவிட்டதா? போர்க்களத்தில் என்னைக் கொன்றிருந் தால் பொங்கிப் பூரித்திருப்பேன். இந்தப் பொல்லாப் புக்கு இரையாயிருக்க மாட்டேன். பொருமைக்காரர். களால் பழிசுமத்தப்பட்டு இந்தப் பூதத்திவிலே நாளுக்கு நாள் செத்துக்கொண்டிருக்கின்றேன். என் மங்காத வீரத்தின் ஆணையாகக் கேட்கின்றேன். என் மாசற்ற உள்ளத்தின் உறுதியின் பேரால் கேட்கின்றேன். மனித, சமுதாயமே! நீயே மனம் விட்டுச் சொல்லு, களங்க, மில்லாத என் சேவையில் ஓர் கருங்கோடு. பொய்யை மெய்யென்ருக்கும் வஞ்சகரை வீழ்த்த ஒரு வீரன் இது. வரை தோன்றவில்லையா? உண்மைக்காகப் பரிந்துபேசும். உத்தமர்களின் பூண்டே அழிந்துவிட்டதா? என்னேக் குற்றவாளியாக்கிய எத்தர்களே எதிர்க்கும் துணிவு கொண்ட தீரன் ஒருவன்கூட இல்லையா? எல்லோருமே அநீதிக்கு மண்டியிட்டுவிட்டனரா ? ஒரு உயிர் இல்லையா. எனக்காகப் போரிட, உண்மையை உரைக்க, நீதியை நிலைநாட்ட ? . . . . - இனவெறி என் தூய்மையை இருட்டடிப்புச் செய்து விட்டதே. தினர்களே தியாகத்தின் சேய்களே ! நீதியின் செல்வப் புதல்வர்களே ! இந்த நிரபராதியைக் காப்பாற்ற உங்களில் ஒருவருக்குமே துணிவு பிறக்கவில்லையா ? கருணையாளர்களே இந்தக் கைதியின் கண்ணியத்திற்த இடப்பட்டிருக்கும் விலங்கை உடைத்தெறிய மாட்டீர் 弦6TT?' - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/6&oldid=759950" இலிருந்து மீள்விக்கப்பட்டது