பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 எமிலி ஜோலா கிறேன். டிரைபஸ் குற்றமற்றவன்; ' அழுத்தமாகச் சொல்லுகிறேன் டிரைபஸ் குற்றமற்றவன், எங்கோ இருந்து யாரோ சொல்கிருன் என்றெண்ணுதிர்கள். ஜோலா சொல்கிருன், குழிதோண்டிப் புதைக்க இருந்த நீதியைக் காப்பாற்ற இருந்த இந்த நாட்டின் விசுவாச மாக்க ஏழை ஜோலா சொல்கிருன், டிரைபஸ் குற்றமற்ற வன். எஸ்டரெஸி :- நயவஞ்சகா நல்லவன் போல் நடித்து சட்டத்தைச் சரிப்படுத்திவிட்டு நீதியை உன் காலடியில் போட்டு மிதித்த துன்மார்க்கனே! நீதான் குற்றவாளி. உன்னே நான் குற்றவாளி என்று சொன்னதற்கு ஆதாரக் கடிதங்களைக் காட்ட நான் தயாராயிருந்தும்: அவைகளே வாங்கிப் படிக்கத் தைரியமில்லாமல், என் வழக்குக்கும் டிரைபஸ் வழக்கிற்கும் சம்மந்தமில்லே என்று மழுப்பிவிட்டார்கள். நான் அவைகளே எழுத நேர்ந்ததற்குக் காரணம் டிரைபஸின் பரிதாபத்துக்குரிய நிலேதான். டிரைபஸ் வழக்கிற்கும், என் வழக்கிற்கும் ஒரு தொடர்புமில்லை யென்ருல் நான் ஒன்று கேட்க விரும்பு கிறேன். எங்கேயோ ஜெர்மன் இராணுவ முகாமில் டிரைபஸ் எழுதியதாக யாரோ எழுதிய போர்ஜரிக் கடித மான போர்டோ என்ற கடிதத்துக்கும் டிரைபஸ்-க்கும் அல்லது இந்த நாட்டுக்கும் என்ன சம்மந்தம்? எப்படி போர்டோ என்ற கடிதத்துக்கும் பிரெஞ்சு இராணுவத் தலைவனுக்கும் சம்மந்தமுண்டு என்று இராணுவ நீதி மன்றத்தார் தீர்மானித்தார்களோ, அதேபோல் என் வழக்குக்கும் டிரைபஸ் வழக்குக்கும் தொடர்பு உண்டு என்று வாதாடினேன். வெறும் வாதம் மட்டிலுமல்ல, தக்க ஆதாரங்களோடு வாதாடினேன். பயந்துவிட்டார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/67&oldid=759958" இலிருந்து மீள்விக்கப்பட்டது