பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7O எமிலி ஜோலா மேல் நமக்கிஷ்டமான கட்டடத்தை எழுப்பிவிடுவது. மற்ருென்று :- அவர்கள் எண்ணத்துக்கெதிராகவிடா மல் போராடி, அதனுல் வரும் சகல விதமான துன்பங், களே ஏற்றுக்கொண்டு, அதனுல் அவர்களுக்குப் பிறக்கும் அனுதாபத்தைச் சாதகமாகக் கொண்டு அவர்களே நம் முட்ைய வழிக்குத் திருப்பிவிடுவது. ஆக இந்த இரண்டு வழிகளில் ஜோலா பின்பற்றியது இரண்டாவது முறையைச் சேர்ந்தது. தொடக்க முதற்கொண்டு, நஞ்சாக்கப்பட்டிருந்த மக்கள் எண்ணத்திற்கெதிராகப் போராடி இறுதியில் தம் வழித்திருப்பினர். மக்கள் கூட்டம் கடல்போல் பொங்கி எழுந்தபோதும், இரா ணுவம் சிறியபோதும், நீதிமன்றம் கோபச்சிரிப்புச் சிரித்தபோதும், ஜூரர்கள் வஞ்சித்தபோதும், எதிரிகள் தன்ன இழிவாக நட்த்துவதற்காகக் கூலிகளேயும், காலிகளையும் ஏவியபோதும் சலிக்காது போராடியவன் ஜோலா. மேடு பள்ளங்களில் சென்றுகொண்டிருக்கின்ற வண்டி சரிவில் கட கடவென்று ஓடி, மறுபடியும் ஏற். றத்தில் போகிறபோது பின்னலிருந்து தள்ளவேண்டிய நிலைக்கு வருவதைப்போல் டிரைபஸ் சம்மந்தமாக ஏற் பட்ட கிளர்ச்சி நாட்டில் சில நாட்கள் விறுவிறுப்டைத் தருவதும், மறுபடியும் நிதானமான நிலையடைவதுமான நில இருந்துகொண்டிருக்கிறது. அத்தகு நிலக்குக் காரணம் பொதுமக்கள் இந்த வழக்கில் கவனம் செலுத் திய அளவு நேரடியாகக் கலந்துகொள்ளவில்லை. ஏனெ னில் இது அவ்வளவு சிக்கலாக இருந்தது. டிரைபஸ் செய்தது குற்றந்தான் என்று சட்ட ரீதியாக நீதிமன்றம் ஒரு பக்கம் தீர்ப்பளிக்கிறது. அரோரி, பிகாரோ பத்திரி கையில் கட்டுரை மூலம், டிரைபஸ் குற்றமற்றவன் என்று ஜோலாவாதாடுகிருன். எது உண்மை, எது பொய் என்றே பொதுமக்கள்ால் விரைவில் புரிந்துகொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/71&oldid=759963" இலிருந்து மீள்விக்கப்பட்டது