பக்கம்:எமிலி ஜோலா-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 எமிலி ஜோலா அப்படி ஒரு புண்ணியவான் இருக்கின்ருன் என்ருல் எனது தாய் நாட்டின் அதிர்ஷ்டந்தான். ஒருவனவது உத்தமன் இருக்கமாட்ட்ானு என்று நான் பல முறை நினைத்ததுண்டு. அந்த உத்தமன் தான் எனக்காகப் போராட முன்வந்தான்போலிருக்கிறது. ஜோலா என்றனர் வந்தவர்கள். ஜோலா-உண் மைதான். ஜோலா என்ருல் உலகத்தின் ஆடை என் றல்லவா பொருள். முத்தை எடுக்கக் கடலில் குதிப்ப தைப்போல், பொன்னே எடுக்க நிலத்தைத் தோண்டு வதைப் போல எனக்காக நீதியைத் தேட நெருப்பில் குஇத்திருக்கின்ருன். என்னே இன்னுனென அறியாமலே எனக்காகப் போராட முன்வந்தான் என்ருல், எவ்வளவு தியாக சிந்தையப்பா அவனுக்கு? என்ன நெஞ்சுறுதி அந்த நீதிமானுக்கு? ஜோலா ஒருவன் என் பொருட்டு வாதாட முன் வந்தான் என்ருல், அழுதுகொண்டே அம்புலிவேண்டு மென்று கேட்ட குழந்தைக்கு அ ந் த அம்புலியே கிடைத்துவிட்ட மாதிரிதான். அழுவது ஒன்று மறியாத குழந்தையாயிருந்தாலும் அம்புலி கிடைக்காதபொருள். ஆணுல் என் வகையில் ஒரு ஜோலா தோன்றின்ை என் ருல், அவன் எனக்காகவே இந்தப் பிரெஞ்சு நாட்டில் தோன்றியிருக்க வேண்டும். அப்பெருந்தகை வேறு நாட்டில் பிறந்திருந்தால் இந்தப் பேதைக்கு உய்வே இல்லாமல்போய்விட்டிருக்கும். எனக்கு வாழ்வளிக்க, என் மாசில்லாத குணத்தை வெளிப்படுத்த, கயவர் களின் குற்றத்தைக் களைந்தெறிய ஒரு ஜோலா தோன்றி யிருக்கின்ருன். ஒருவித கைமாறும் கருதாமல் தான் முன்வந்திருக்கக் கூடும். ஏனெனில் ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டே இருக்கும் எனக்காகப் பதிைேரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-2.pdf/83&oldid=759976" இலிருந்து மீள்விக்கப்பட்டது