பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 0 முருகுகந்தரம்

நிராகரிக்கப்பட்ட வரலாற்றை நுஃமான் மிகவும் விரிவாகச் சுட்டிக் காட்டுகிறார். செய்யுளின் தேவையை இப்சனைப் போல் முற்றாக நிராகரிக்கவும் வேண்டாம்: எலியட்டைப் போல் மிகைப்படுத்தி-வற்புறுத்தவும் வேண்டாம் என்று வாதிடும் நுஃமான்,நாடகப் போக்கிற்கு ஒர் ஆழமான கவித்துவ வீச்சைத் தரக்கூடியது "அளவான யாப்போசை” என்று தீர்மானிக்கிறார். நுஃமான் அளவான யாப்போசை என்ன என்பதை 'மஹாகவி'யின் பா நாடகங்கள் பற்றிய ஆய்வுரையில் தெளிவாக்குகிறார். பேச்சு வழக்குச் சார்ந்த செய்யுள் நடை” என்பது அவர் தரும் குறிப்பு. இத்தகைய பேச்சு வழக்குச் சார்ந்த -பெரும்பான்மை மக்கள் பேசும் மொழிநடையில் இல்லாத காரணத்தினால்தான் பேராசிரியர் சுந்தரனார் அளித்த 'மனோன்மணீயம் படிக்கப்படும் அளவிலேயே நின்றுபோய் விட்டது; மக்களிடம் சென்றடையவில்லை என்ற கருத்தும் இங்கே நினைப்பதற்குரியது.

'சிலப்பதிகாரமும், மனோன்மணியமும், கலாவதியும் நாட்கங்கள் என்று கூற நான் தயாராக இல்லை” என்று கோமல்சுவாமிந்ாதன் மறுப்பதற்கும் கூடக் காரணம் இவை மேற்கொண்டுள்ள மக்களை நெருங்கி வராத, அந்நியமான நடை என்றே கொள்ளலாம். எனவே மக்களுக்கான நாடகம், மேடையேற்றி நடிக்கப்படுவதற்கான நாடகம் என்று வரும்போது நாடகத்தின் 'ஊடகம் எப்படி அமையவேண்டும் என்னும் விவாதம் மிக முக்கியம் பெற்று விடுகிறது.

5

எதிர்காலத் தமிழ்க் கவிதை என்னும் என் நூலில் நானும் சில விவாதங்களை எழுப்பியிருக்கிறேன். இன்று தமிழில் கிளைத்துத் தழைத்திருக்கும் புதுக்கவிதைகள்’ என்பவையும் 'வசன கவிதைகள்’ என்பவையும் வேறு வேறானவை என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். புதுக் கவிதை' என்பது முழுவதுமாய் யாப்பமைதி-ஒசை அமைப்பு ஆகியவற்றிலிருந்து வெட்டிக் கொண்டு, விடுப்ட்டு அமைவது அல்ல; சட்டையைக் கழற்றுவதுபோல் பாவனை செய்து, உதறி, மறுபிடியும் அணிந்து கொள்ளும் காரியமே புதுக்கவிதை'யில் நிகழ்ந்துள்ளது.