பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எளிநட்சத்திரம் 0 12

விவாதிக்கலாம், இது என்ன கவிதையா? செய்யுளா? வசனமா? உரைநட்ையா? அல்லது எல்லாம் சேர்ந்ததோர் கதம்பமா, என்று விவாதிக்கலாம்.iழந்தமிழருக்கு இருந்ததாகக் கவிஞர் சொல்லும் ஈழநாட்டின் மீதான உரிமை இன்று சாத்தியமா, வரலாற்றின் சக்கரங்கள் பின்நோக்கிச் சுற்றப்படுதல் சத்தியமா என்று விவாதிக்கலாம். தேசிய இனங்கள் ஆங்காங்க்ே தன்னாட்சி என்று தனித்தனியே பிரிவதென்றால், குருதிசிந்தி சவால்களை எதிர்கொண்டு கட்டிக் காத்து வந்துள்ள சோசலிஸ் நாடுகளிலும் கூட இவ்வாறு தேசிய இனங்கள் என்ற பெயரில் பிரியத்தான் வேண்டுமா என்று விவாதிக்கலாம். இந்தியாவின் பஞ்சாபியர் பிரச்சனையை வைத்துத் தொடங்கும் நாடகம் அது பற்றி எந்தக் கருத்தையும் குறிப்பிடவில்லையே என்று விவாதிக்கலாம். ஈழத்துப் போராளிகள் இன்னும் ஓரணியில் திரண்டு எழவில்லையே, அது பற்றி நாடக ஆசிரியர் என்ன சொல்லுகின்றார் என்று விவாதிக்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட கருத்துக்கள்ை, அல்லது அவற்றுக்கு மேலேயும் பல கருத்துக்களை வாசகர்கள் கூடி விவாதிக்க இயலுகிறதோ இல்லையோ, மிக முக்கியமான இன்னொரு கருத்தைக் கட்டாயமாக விவாதிக்க வேண்டும்.

“நமது எதிரிகள் யார்? நமது நண்பர்கள் யார்? புரட்சியில் இந்தப் பிரச்சினை முதல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. சீனாவின் கடந்தகாலப் புரட்சிகள் எல்லாம் சாதித்தவை மிகக் குறைவாக இருப்பதன் அடிப்படைக் காரணம், அவை உண்மையான பன்கவர்களைத் தாக்குவதற்கு உண்மையான நண்பர்களை ஐக்கியப்படுத்தத் தவறியதேயாகும்.”

(மக்கள் சீனம் காட்சியும் கருத்தும், ப.13) என்றார் மாவோ. புலிகளின் போராட்டக் களங்களோடு மாவோவின் கருத்தைப் பொருத்திப் பார்க்கவேண்டும். புலிகளின் பல பின்னடைவுகளுக்கு ஒரு பாதி காரணம்