பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 28 காட்சி 4

இடம் : பல்கலைக் கழகவளாகம்:

ஆசிரியர் விடுதி நேரம் : மாலை உறுப்பினர் : பேராசிரியர் மேகலை, நம்பி, சொற்கோ, வினா, தோகை, பணிப்பெண்.

தமிழ்ப் பேராசிரியர் மேகலை நாற்பது வயதைத் தாண்டிய பேரிளம் பென், பெண்ணியம்பேகம் கொள்கையர் (Feminist): எல்லோருக்கும் உதவும் இயல்பினர். இவரது இல்லம் மாணவர் மொய்க்கும் ஒரு தேன் கூடு. பல கலைகளும், கொள்கைகளும் சந்திக்கும் ஆய்வரங்கம். மருத்துவ மாணவனாகிய நம்பி, மேகலையின் நாடித் துடிப்பைச் சோதித்துக் கொண்டிருக்கிறான். platil:

நேற்று உண்டது

நினைவிருக்கிறதா?

ஒவவாமையால தான

உடம்பெல்லாம்தடிப்பு

நாக்கை நீட்டுங்கள்,

(மேகலை நாக்கை நீட்ட நம்பி உற்றுப்பார்க்கிறான்)

மேகலை:

கத்தரிக்காயும்

கருணைக்கிழங்கும்

எனக்கு

ஒத்துவராத உணவுப்பொருள்கள்.

நேற்று

விமலையின் வீட்டில் விருந்து.

கத்தரிப்பிஞ்சை

நாலாய்ப்பிளந்து

எண்ணெயில் துவட்டி