பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 0 முருகுகந்தரம்

3

தமிழ் நாட்டில் விவாதித்து முடிவுக்கு அல்லது ஒரு தெளிவுக்கு வரவேண்டிய இலக்கிய விஷயங்கள், அரங்குகளில் ஒரளவுக்குக்கூட இன்று விவாதிக்கப்படுவதில்லை. மாறாக, பணமா-பாசமா? மனைவியா? மாமியாரா? போன்ற விவகாரங் கள் மன்றங்களில் மக்களின் முன்னே அலசப்படுகின்றன. செய்தக்க செய்யாமையானும் கெடும் என்ற வள்ளுவன் குறளுக்கு இன்றையத் தமிழ்நாட்டு அரங்குகளின் விவாதங்களே சான்றாகின்றன. செய்யுள்-கவிதை-வசன கவிதை- புதுக்கவிதை ஆகிய இவை இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை; அல்லது போதுமான விவாதத்துக்கு உட்படுததப்பட்டவில்லை என்றே தோன்றுகிறது. இந்திய விடுதலைக்குப்பின் என்று ஒர் எல்லைக்குப் பிறகு பார்த்தாலும் ஏறத்தாழ அரை நூற்றாண்டு கழிந்தவிட்டது! பல்கலைக் கழகங்கள் பட்டங்கள் வழங்குகின்றன. ஆய்வுகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எனினும் இந்த நூற்றாண்டின் நவீனத்துவத்தை எதிர்கொள்ளும் தகுதிமிக்க காலத்துக்கு ஏற்றதான இலக்கியத் திசைவழிகளை, நாம் தமிழில் இன்னும் தீர்மானித்துக் கொள்ளாமல்தான் இருக்கிறோம் என்றே தோன்றுகிறது. கவிதை என்பதும் செய்யுள் என்பதும் ஒன்றா? வெவ்வேறா? புதுக்கவிதை என்பதும் வசனகவிதை என்பதும் ஒன்றா? வெவ்வேறா? என்ற வினாக்கள் இன்னும் பரந்துபட்ட அளவில் ஆராயப்படவில்லை. ஒரு பொதுக்கருத்து எட்டப்படவில்லை: இலக்கிய வரலாற்றில் சில முக்கியமான தீர்மானங்களை எட்டுவதில் கால அவகாசம் அதிகம் தேவைப்படும் என்பதும் நியாயமே. தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தமட்டிலும் நாம் விவாதத்திற்கு எடுத்துக்

கொள்ளாமலேயே நீண்டகால அவகாசத்தை வீணடித்திருக்கிறோம். அல்லது அரையும் குறையுமாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் விவாதித்து

முடிவெடுக்காமலேயே நேரத்தை நகர்த்தி வந்திருக்கிறோம். அல்லது வேண்டாக விவாதங்களை மேலே கிளப்பி வேடிக்கை பார்த்துவீணாக்கியிருக்கிறோம்.