பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரதேசியின் உபாயம்

87



காலம் ; இப்போது அது லேசில் நிரம்புவதில்லை. காணிக்கை போடும் வட்டைகள் சூன்யமாகிவிட்டன. கோயிலுக்கு இரண்டு யானைகள் இருந்தன. அவற்றிற்குப் போதிய உணவு போடாமல் இளைத்து விட்டன.

ஆண்டவன் சந்நிதியில் உளமுருகித் திருப்புகழும் அலங்காரமும் பாடிப் பணியும் பரதேசி ஒருவர் இருந்தார். கோயில் போகும் போக்கைக் கண்டு உள்ளம் குமுறியவர்களில் அவரும் ஒருவர். "ஆண்டவனே, சூரபன்மன் முதலிய அசுரர்களின் அக்கிரமங்களை அழித்த உன்னுடைய திருவருள் இந்த அரக்கனுடைய அக்கிரமத்தை எப்படித்தான் சகித்துக் கொண்டிருக்கிறதோ !" என்று மனசுக்குள்ளேயே சொல்லி வருத்தப்படுவார்.

நாளடைவில் திருச்செந்தூரில் நடைபெறும் இந்த விஷயங்கள் மேலதிகாரிகளுக்கு எட்டின. ஆனாலும் திட்டமாக இன்ன தவறு என்று யாவரும் தெரிவிக்கவில்லை. என்னதான் நடக்கிறதென்று தெரிந்து கொள்ள எண்ணி மேலதிகாரி ஒருவர் திருச்செந்தூருக்கு வந்தார். அவர் வருவது எப்படியோ மானேஜருக்குத் தெரிந்துவிட்டது. எல்லாம் ஒழுங்காக நடப்பதுபோலக் காட்டுவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து வைத்தார். கணக்குகளை ஒழுங்குபடுத்தி வைத்தார்.

அதிகாரி வந்தார். கோயிலைப் பார்வையிட்டார். பெரிய தவறு ஒன்றும் நேர்ந்ததாக அவர் கண்ணுக்குப் படவில்லை. சிலரை விசாரித்தார். மானேஜருடைய அதிகார மிரட்டலுக்கு உட்பட்ட அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/95&oldid=1530045" இலிருந்து மீள்விக்கப்பட்டது