பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(D—{ಿತ್ತು உலகின்நட்சத்திரம் தீபம்'தாபாத்தசாதி வடக்கே ஒடிச்சலித்து ஸ்ெகண்ட்-ஹாண்ட்' ஆகிப்போன வங்காளிக்கதைகளும், இந்திக்கதைகளும், மராத்திக்கதைகளும் தமிழில் படம் எடுப்பதற்காக விலைக்கு வாங்கிக் கொண்டு வரப்படுவது மரபாகி விட்டதனால் தமிழிலேயே சுயமாகப் பிறந்துதமிழிலேயே மூச்சுவிட்டுக்கொண்டிருக்கிற சுயபாஷைன் கதைகள் திரைப்படத்திற்கு லாயக்கில்லை என்று 'பிரஷ்டம்" செய்யப்பட்டாயிற்று. அதே சமயத்தில் சுய பாஷையில் வெளியாகின்ற நாவல்கள், சிறு கதைகள், தொடர்கதைகளி லிருந்து ஐடியாக்கள், வசனங்கள், உணர்ச்சிகரம ான கட்டங்கள், முடிவுகள் ஆகியவற்றைத் திருடிப் புகுத்திக் கொள்கிற காரியத்தைச் சில திரைப்பட வசனகர்த்தாக்கள் கூசாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். காப்பிரைட் சட்டமோ மயிரிழை அளவுதான் எழுத்தாளனின் உரிமையைக் காப்பாற்றுகிறது. எப்படித் திருடினால், காப்பிரைட் கேஸ் வராது என்கிற விஷயத்தை முன் கூட்டியே தேர்ந்த வக்கீல் ஒருவரிடம் கலந்தாலோசித்துக் கொண்டுதான்.அப்புறம் கதை திருடுகிறவர் களும் திருடுகிறார்கள். - . - - 'ஸிங்கிள் ஐடியா ஒரே மாதிரி இருக்கறத்துக்காகக் கேஸ் ஒன்றும் போடறதுக்கில்லே. வேறே ஏதாவது உங்க கதையிலே ருந்து திருடிருக்கானான்னு சொல்லுங்க" என்று பாதிக்கப்பட்ட எழுத்தாளனைவக்கீல்கேட்கும்போது, "இந்தப் பாழாய்ப்போன காப்பிரைட் ஆக்ட்" இத்தனை பலவீனமாகவா இருக்கிறது?" என்று எழுத்தாளன் மனம் நைந்து போவதைத் தவிர வேறு வழியில்லை. • - கதை திருடுகிற கயவர்-திரைக்கதைவசனம் டைரக்ஷன்என்கிற பெயருடன் காடிலாக் காரில் சவாரி செய்து கொண்டிருக்க. அவனுக்குத் திருட்டுக் கொடுத்த எழுத்தாளன் விசுக்குவிசுக்கென்று கால் நோகவக்கில் வீட்டுக்கு நடைபோட வேண்டியிருக்கிறது. திரை நடிகர்களுக்குக் கருப்புப் பணம் இரண்டு லட்சமும் வெள்ளைப் பணம் இரண்டு லட்சமுமாக வாரிவாரிக் கொடுக்கிறதமிழ்ப்படாதிபதிகள்தப்பித்தவறறி ஓர் எழுத்தாளனிடம் திரைப்படத்துக்குக் கதை கேட்க வந்து விட்டாலோ, அறுநூறு, எழுநூறு பக்கமுள்ள ஒரு முழுக் கதையை-இருநூற்றைம்பது ரூபாய்க்கோமுந்நூறு ரூபாய்க்கோ -பேரம் பேசுகிறார்கள். ஹிந்திப் படத்திலிருந்து டப் செய்கிற