பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ਾਂ-( எழுத்து உலகின் நட்சத்திரம் 'தீபம்' நா. பார்த்தசாரதி ) 1965 முதல், தீபத்தின் வளர்ச்சியில் நானும் சிறிது பங்கேற்றேன். மணிக்கொடி சீனிவாசன், டி.எஸ். சொக்கலிங்கம், நா.வானமாமாலை, தொ.மு.சி.ரகுநாதன் ஆகியோரைத் தீபம்’ சார்பில்பேட்டி கண்டேன். இத்தகைய பேட்டிக் கட்டுரைகளுடன், தீபத்தில் நடைபெற்ற இலக்கிய விவாதங்களிலும் பங்கேற்றேன். நூல் மதிப்புரைகளும் எழுதினேன். என்னை விட மிக அதிகமாக எழுதி, தீபத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர் முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் என்பதை இங்கே அவசியம் குறிப்பிட வேண்டும். சி.சு.செல்லப்பா, க.நா.சுப்ரமணியன், தி.ஜானகி ராமன், இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், வண்ணதாசன், வண்ணநிலவன், சுந்தர ராமசாமி மற்றும் எத்தனையோ தலை சிறந்த எழுத்தாளர்களையும்,வாசகர்களையும் ஒருங்கிணைக்கும் பாலமாகத் தீபம் ஒளிவீசியது என்று பெருமிதத்துடன் குறிப்பிடலாம். இதில் இலங்கைப் படைப்பாளிகளும் அடங்குவர். . - - 1960 ஆம் ஆண்டுகளில் கலைமகள், அமுதசுரபி முதலிய ҹ இலக்கிய மாத இதழ்களும் வந்தன. 'எழுத்து முதலிய சிற்றேடுகளும் வந்தன. தாமரையும் வந்தது. எனினும், தரமான் இலக்கியம் படைக்கும் பல படைப்பாளிகளை ஒருங்கிணைக் கும் சீரிய அரங்கமாகத் தீபம் வெற்றிகரமாகப் பணியாற்றியது. அதற்கான அடிப்படைக் காரணம், 'தீபம்’ என்ற கப்பலைத் திறம்படச் செலுத்திய ஆசிரியர் நா.பா.அவர்கள்தாம்.

நல்ல தரமான, ஆக்கப் பூர்வமானகலை இலக்கியத்தை வளர்த்தல், இந்திய இலக்கியத்திற்கு, உலக இலக்கியத்திற்கு நிகராகத் தமிழ் இலக்கியத் தரத்தை உயர்த்துதல், இப்பணியில் அனைத்துப் படைப்பாளிகளையும் இணைத்தல், அவர்களது. கருத்துச் சுதந்திரத்திற்கு, அவர்களையே பொறுப்பாக்குதல், சுருங்கச் சொன்னால், பாரதியின்பாதையைக் கலை இலக்கியத் துறையில் வழுவாது கடைப்பிடித்தல், இத்தகைய உன்னதக் கொள்கைகளைத் தீபத்தில் நடைமுறைப்படுத்தினார் நா.பா. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தொன்மையான தமிழ் மரபின் சிறந்த அம்சங்களை உள் வாங்கிக் கொண்டு, புதுமை இலக்கியங்களை நமது படைப்பாளிகள் உருவாக்க வேண்டும் என்பது நா.பா.வின் கருத்து. இது அவரது பத்திரிகையின்