பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Cੋ-( எழுத்து உலகின் நட்சத்திரம் தீபம்' நா. பார்த்தசாரதி J எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு அளித்தல்-அரசியல் விமர்சனங்களை - நடு நிலைக் கண்ணோட்டத்துடன் - அதே சமயம் தயவு தாட்சண்யத்திற்கு இடமின்றி எழுதுதல் அவர்தனது சொந்த ஏடு பற்றி உறுதி பொங்கும் குரலில் உற்சாகத்துடன் சொன்னார். அப்போது என்னிடம் ஒர் உதவி கேட்டார். 'பத்திரிகையை வெளியில் கொடுத்து அச்சுக் கோத்துக் கொண்டு வருவதென்றால் செலவு அதிகமாகும். நமது விருப்பம்போல் பத்திரிகையின் வடிவமைப்பு அழகாக அமையாது போய்விடும். ஆகவே அலுவலகத்தில் சொந்தத்தில் அச்சுக் கோப்புப் பிரிவை அமைக்க முடிவு செய்திருக்கிறேன்" என்றார். - அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டேன். 'அச்சுக் கோப்புப் பகுதிக்கு ஒரு நல்ல கம்பாசிட்டர் வேண்டும். அவருக்கு இலக்கியத்தில் நல்ல ஆர்வமும் - படைப் பாளிகளிடம் மதிப்பும் இருக்க வேண்டும். அப்படி ஒருவர் கிடைத்தால் - பத்திரிகையின் வடிவமைப்பில் அவரே உற்காகத்து டன் ஈடுபடுவார்'... என்று சொல்லிக் கொண்டே போனார். அப்போது தமிழ்ச் செய்தி அலுவலகத்தில் ராஜதுரை என்று ஒரு கம்பாசிட்டர் இருந்தார். புதுமைப்பித்தனில் தொடங்கி-அந்தக் காலக்கட்டத்தில் புகழ் பெற்றிருந்த அனைத்துப் படைப்பாளிகளின் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகளை எல்லாம் படிப்பார்; படித்ததை எல்லோரிடமும் உற்சாகம் பொங்க எடுத்துச்சொல்வார். நா.பா. பேசிக் கொண்டிருக்கும்போதே என் மனதில் ராஜதுரைதான் - நா.பா.விரும்பும் இலக்கிய ஆர்வம் கொண்ட கம்பாசிட்டர் என்பது பளிச்சிட்டது. . "எங்கள் அலுவலகத்திலேயே நீங்கள் குறிப்பிட்ட தகுதிகள் எல்லாம் கொண்டவர் ஒருவர் இருக்கிறார். அவரையே உங்களிடம் அனுப்பி வைக்கிறேன்' என்று கூறி - ராஜதுரை என்ற கம்பாசிட்டரின் பெருமைகளை நா.பா.விடம் விலாவாரியாகச் சொல்லிக் கொண்டே போனேன். மறுநாள் - ஈ.வெ.கி. சம்பத் அவர்களை சந்தித்து ராஜ துரையை நா.பா.வுக்கு உதவியாக அனுப்பி விடலாம்' என்றேன். சம்பத்துக்குநா.பா.வின் எழுத்துக்கள் மீதுஈடுபாடுஉண்டு. நா.பா. கல்கியிலிருந்து வில்க நேர்ந்ததற்கு வேறு எத்தனை காரணங்கள் இருந்தாலும்-தமிழ்ச் செய்தி வெளியிட்ட தலைப்புச் செய்தியும்