பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జెథ్రె உலகின் நட்சத்திரம்'தீபம்" நா.பார்த்தசாதி ) அன்றிலிருந்து இன்றுவரை என்னிடமிருக்கும் இந்தப் பயம்தான் அதற்குக்காரணம் என்னுடைய கடைசி எழுத்தின்கடைசி முற்றுப் புள்ளியை நான் வைக்கின்றவரை இந்த பயம் என்னை விட்டுப் போய்விடக்கூடாது என்று வேண்டிக் கொண்டிருக்கிறேன். ஏன்? உலகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களையெல்லாம் உருவாக்கி முன்னுக்கு கொண்டுவந்தது இந்தப்பயமே. எழுத்தாளனின் முதல் வாசகனாய், அவனைக் கண்டிக்கும் மனச்சான்றாய், அவன் வளரச்சியை அறிவுறுத்தும் ஆசானாய் விளங்குவதும் இந்தப் பயம்தான். 3. தன்னைத்தானே சோதித்துக் கொள்ளும் இந்தப் பயம் எழுத்தாளனுக்குப் பயன்படுகிற இலாபக் கணக்கைச் சேரும். இது ஒரு நிலை. அதாவது முதல்படி இதற்கு அடுத்த நிலையில் இந்தப் பயமே வேறொரு விதமாக வளரும். குளத்தில் தண்ணீரில்அளவு உயரஉயரஅதன்மேல் மிதக்கும்தாமரைப்பூவும் மேலே உயர்ந்து கொண்டு போவதுபோல் எழுத்தாளன் நாட்டின் அறிவு வளர்ச்சிக்கேற்ப தன் எண்ணங்களை உயர்த்திக் கொண்டே போக வேண்டும். - . - அப்போது பழைய பயம் உயர்ந்த குறிக்கோள்களையும் பண்பையும் நல்ல சூழ்நிலையையும் சமூகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று புதிய உயர்ந்த நற்பயமா(னா) கமாறும். தண்ணீர் உயரும்போது பூ உயராவிட்டால் உள்ளே சிக்கி அழுகி அழிவது போல் இந்த முன்னேறும் பயமும் கருத்து வளர்ச்சியும் இல்லாத எழுத்து, காலப்பெருக்கில் அழுகி அழிந்துபோய்விடுகிறது. இதில் ஒரு பயம் என்னைப் பற்றியது. மற்றொரு பயம் எழுத்தை வெளியிடுகின்ற பத்திரிகைகளைப் பற்றியது. ஊரெல்லாம்; நல்லவள் என்று புகழ்ந்தாலும், மாமியார்கள் போன்றவர்களே. தன் நிலையை ஊன்றிக் கொண்ட மருமகளுக்கு மாமியார் பயம் போய்விடும். மாறாக மாமியாருக்கு மருமகள் மேல் பயம் உண்டானாலும் வியப்பதற்கில்லை. தன் நிலையை ஊன்றிக் கொள்கிறவரை மருமகள் பாடு திண்டாட்டம்தான். இதேநிலையை இளம் எழுத்தாளர், முதிர்ந்த () எழுத்தாளர் பத்திரிகை ஆசிரியர் ஆகியோருக்கு இடையிலும் நீங்களாகவே ஒப்பிட்டுப் வெளிப்படையாகச் சொல்லமாட்டேன். காரணம்? நான் இன்னும் மாமியார் பயம் நீங்காத மருமகள். சென்ற தலை முறையில் அடியார்களாக் இருந்து கோவிலிலுள்ள இறை வனுக்குப் பாடியும் பூத்தொடுத்தும் பணி புரிந்தவர்களெல்லாம்.