பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் H - (Zਤ] வச்சிக்கப்பா' என்றார். மதியம் 1 மணிக்கு அந்த அலுவல கத்திற்கு சென்றவனுக்கு 1.05 மணிக்கெல்லாம் வேலை கிடைத்து விட்டது. - அரவிந்தன்' என்ற நல்ல உள்ளத்தை பிரசவித்த ஆண் தாயாயிற்றே நா.பா. எல்லா மனிதரிடமும் நல்ல அம்சங்களை எடைபோடும் திறன் பெற்றிருந்தார். இளைஞனின்நம்பிக்கை அவரைக் கவர்ந்தது. தீபத்தின் ஒளியில் அவன் வாழ்க்கை மலர்ந்தது. - - * உருவம் இல்லாத திரவத்தை பாத்திரத்தின் வடிவத்திற் கேற்ப நிறைத்துக் கொள்ள முடியும். எதுவும் தெரியாமல் வந்த இளைஞனையும் நா.பா. அப்படித்தான் வடிவமைத்தார். - பத்திரிகையின் விநியோகப்பிரிவு, உற்பத்திப் பிரிவு, பிழை திருத்தும் பிரிவு, ஒருங்கிணைப்புப் பிரிவு என எந்த பேதமும் பிரிவும் பார்க்காமல் எல்ல்ாப் பிரிவுகளிலும் அவனுக்கு அனுபவம் வாய்க்கச்செய்தார் நா.பா. எல்லாபாத்திரங்களிலும் நிறைந்தது.அந்தத் திரவம். -- - - அரவிந்தனால் ஆகர்ஷிக்கப்பட்ட இளைஞன், நா.பா.வின் ஒவ்வொரு பிரசவத்தையும் ஆவலோடு எதிர்பார்த்தான். தீபத்தின் ஒளி அவனுக்குள் புதிய சமூக வெளிச்சத்தை பாய்ச்சிக் கொண்டிருந்தது. அது ஒரு 80 பக்க இலக்கியப் புரட்சி. காந்தியத்தையும் மார்க்சியத்தையும் தேவையான அளவில் கலந்து தந்து, அதிர்ந்து பேசாமல் அமைதியாக புரட்சி நடத்திக் கொண்டிருந்தது. மேல்நாட்டு எழுத்தாளர்களின் மேற்கோள்க்ளை நமது ஊர் எழுத்தாளர்கள் கையாள்வது வழக்கம். அந்த மேற் கூறிவூளும் அதற்குரிய எழுத்தாளர்களின் பெயர்களும்தான் வாசகர்களுக்குத் தெரியுமே தவிர, அந்த மேலை எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளோ படைப் புத்திறனோ வாசகர்களுக்கு எந்த பத்திரிகையும் வழங்கவில்லையே என்ற ஏக்கம் இளைஞனுக்கு இருந்து வந்தது. ஏக்கத்தை தனது வெளிச்சவிரல்களால் துடைத்தது தீபம். மூத்த எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான அசோகமித்திரன் ஒவ்வொரு இதழிலும் மேல்நாட்டு இலக்கிய ஜாம்பவான்கள் பற்றிய வாழ்க்கை குறிப்புகள், அவர்களின் படைப்புகள் பற்றிய எளிமையும், தெளிவும் நிறைந்த விமர்சனங்கள் ஆகியவற்றை எழுதி, இளைஞனின் இலக்கியப்