பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் நட்சத்திரம் "தீபம்' நா. பார்த்தசாரதி) தீபம் மாத இதழ் அந்தரங்க சுத்தியோடு இலக்கிய சேவை செய்ய ஆசைப்பட்டது. தீபம் மாத இதழ் ஒரு சுதந்திர எழுத்தாளனின் தன்மான முயற்சியாக வளர்ந்தது. தீபம் மாத இதழில் தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்கள் யாவரும் சுதந்திரமாகவும் அவரவர் கருத் தோட்டத்திற்குத் தடையின்றியும் எழுதி வந்தனர். - - தமிழ் மொழியின் வளத்துக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் தங்களால் இயன்றதை செய்ய வேண்டும் எனும் ஆர்வம் உள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் - கதைகள், கட்டுரைகள், கவிதைகள், குறுநாவல்கள் தொடர்கதைகள் என்ற வடிவங்களில் - தீபம் இதழ்களில் இடம் பெற்றன. சிந்தனை ஒளி கனலும் எழுத்துக்களும், புதுமையான பகுதிகளும்தீபம் இதழுக்குத்தரமும் கனமும் சேர்த்தன. தரமான வாசகர்கள், ஆழ்ந்த இலக்கிய முயற்சிகளை விரும்பி வரவேற்கும் ரசிகர்கள், குறைவாக உள்ள தமிழ்ச் சூழலில் தீபம் போன்ற இலக்கியத்தரமான பத்திரிகையை நடத்துவது எதிர்நீச்சல் போடும் சாதனையே யாகும். - பல பத்திரிகைகள் வாசகர்களைப் பயன் பெறச் செய்வதை விட, கவர்ச்சிப்பாதையே நோக்கமாகக் கொண்டு கீழ்த்தரமாக இறங்கி சினிமா மயமாக மாறும் இந்த நாளிலும், தீபம் தன் இலட்சியங்களை உறுதியோடு கடைப்பிடித்து, நீண்ட காலம் ஒளியோடு விளங்கமுடிந்தது. இது பெருமைக்குரிய சாதனைதான். நா.ப்ா. தீபம் இதழைத் தனித் தன்மையோடு வளர்ப்பதில் குறையாத ஆர்வம் காட்டி வந்தார். தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும் அதன் வளத்திலும் அக்கறை கொண்டிருந்த அவர், அனைத்து இந்திய மொழிகளின் வளர்ச்சியையும் தமிழ் வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தினார். தமிழ் நாட்டினர்.தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் ; அத்துடன் இதர இந்திய மொழிகளின் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் பற்றியும் அறிய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதன்பிரதிபலிப்புதீபம் இதழ்களில் பளிச்சிட்டது. - தீபம்பத்திரிகையை ஓர் இலக்கிய இயக்கமாக வளர்ப்பதில் நா.பா. கருத்தாக இருந்தார். அவருடைய மனஉறுதியும் அயராத உழைப்பும், அவரைப் போலவே மன உறுதியும் எழுத்தாற்றலும், அவரிடம் பாசமும் அன்பும் கொண்டிருந்த சகோதர