பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் H (rੋ முதலில் N பார்த்தசாரதி என்றுதான் கையெழுத்திடுவார். Na என்றும் சில காலம் எழுதிவந்தார். பின்னர் எண் சோதிடப்படி (அதில் அதிக நம்பிக்கை கொண்டவர்) Naa என்று பின்னர் மாற்றிக் கொண்டார். அதனால் தீபம் என்ற பெயரையும் அலுவலக டெலிபோன் நம்பர் வீட்டு டெலிபோன் நம்பர் கார் நம்பர் எல்லாவற்றிலும் அவருக்கு உகந்த Naa வரும்படி பார்த்துக் கொண்டார். - - பின்னர் கடைசியில் தற்செயலாக வீட்டு நம்பர், போன் நம்பர், கார் நம்பர் எதுவும் அவருக்கு பொருத்தமில்லைாமல் அமைந்து விட்ட போது அவர் கதையும் முடிந்து விட்டது. நாபாவின் சித்தப்பா முத்து அய்யங்காருக்கு M.S.உடன்பாடு இல்லாததால் N.S. முத்து அய்யங்கார் என்று தான் கையெழுத் திடுவார். - - பூரீவில்லிப்புத்தூர் சென்று அங்கிருந்து பஸ் ஏறி வத்திராயிருப்பு சென்றோம். கிராமத்து பெரிய வீடு. ஆனால் மின் விளக்கு இல்லை. வீட்டில் இரண்டு மூன்று லாந்தர் விளக்குதான். அதில் தான் அவர் படைப்புகள் அப்போது உருவாயின. தினமும் லாந்தர்கிளாஸ்களுக்கு கோலப்பொடி போட்டுதேய்த்து பளிச்சிடச் செய்ய வேண்டியது என் வேலை. . பிரபல விஞ்ஞானி K.S. கிருஷ்ணன் வீட்டிற்கு அடுத்த விட்டில்தான் நாபா குடியிருந்தார். அதனால் பலரும் (அப்போது வீட்டு எண் கிடையாது) நாபா வீட்டை கே.எ. கிருஷ்ணன் வீட்டிற்கு அடுத்த வீடுதானே என்று கேட்டார்கள். அதில் நா.பா.வுக்கு உடன்பாடு கிடையாது. என் வீட்டிற்க்கு அடுத்த வீடுதான் கே.எ. கிருஷ்ணன் வீடு என்பார். - அவர் வீட்டில் என்னைப் பெரிதும் கவர்ந்தது ஏராளமான நூல்கள்தான்.அப்பொழுதே அவர் மிகவும் பிஸியான எழுத்தாளர். இலங்கை வீரகேசரியில் வாராவாரம் தொடர் கட்டுரை எழுதி வந்தார். அதில் அவர் புனைபெயரில்தான் எழுதிவந்தார். அவர் பெயர் இராமபூரணன். சுதேசமித்திரன் ஞாயிறு மலரில் புறநானூற்றுக் காட்சிகள் எழுதி வந்தார். அப்போது இந்தியா இலங்கை ஒன்றாயிருந்த காலம். ஒரே நாணயம், ஒரே தபால். இலங்கைக்கு கட்டுரைகளை புக்போஸ்டில் அனுப்புவார். அங்கிருந்து பத்திரிகைகள் மணியார்டர் வரும். ஒரு முறை வந்திராயிருப்பில் இருந்த போது இலங்கைக்கு ரயிலில் டிக்கெட்