பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தீபம் ஜூலை 1975 இதழில் நமது இலக்கிய குடும்பம் பகுதியில் 'நா.பார்த்தசாரதி” எழுதிய கட்டுரை. 18.12.64.நா.பா.வைகல்கி அலுவலகத்தில் சந்தித்தேன். தீபம் தொடங்கியது முதல் அவர்இறக்கும்வரை தினந்தோறும்சந்திக்கும் பழக்கத்தினால் நட்பும், பாசமும் ஏற்பட்டது. அவர் அளித்த கடற்க ைநினைவுகள் புத்தகத்தில் உடன்பிறவா சகோதரர் என்று எழுதி கையெழுத்து இட்டு அன்பளிப்பாக அளித்துள்ளார்கள். 1965ல் தீபம் ஆரம்பித்தஉடன் எனக்கு அரசு பணிக்கு உத்திரவு வந்தது. அந்த பணிக்கு மருத்துவச் சான்றிதழ் நா.பா.வின் நண்பர் டாக்டர் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களிடம் காசு கொடுக்காமல் வாங்கித் தந்தார். அது போல் முன்பு நான் பணியாற்றிய நிறுவனத் திலிருந்து எனக்கு சம்பளமாக சேர வேண்டிய தொகை ரூ.150/-ஐ அவரது நண்பர் வழக்கறிஞர் திரு.எஸ்.ஆர்.எஸ். மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பெற்றுத்தந்தவர் நா.பா. தான். அதற்கு இன்றுவரைதிரு.எஸ்.ஆர்.எஸ்.பணம் பெறவில்லை என்பதை நன்றியுடன் கூறிக் கொள்கிறேன். . நான் பணியில் சேர்ந்த சில தினங்களுக்கு பின்தீபம் நிர்வாகி திரு. சு. திருமலைக்கு சிறைத்துறையில், தட்டச்சுப் பணிநியமனம் வந்தது. ஆனால் திருமலை அரசு பணிக்குச் செல்லாமல், 'தீபம்' நிர்வாகியாகவே கடைசி வரை, நா.பா.விற்கு நன்றிக்கடனுடன் பணியாற்றினார். இன்றும் வாரப்பத்திரிகையில் ப்ரூப் பணியில் பணிசெய்கிறார். சென்ற ஆண்டு (2008)நா.பா. பிறந்த நதிக்குடிக்கு திருமலையும், நானும் சென்று வந்தோம். நா.பா. வாழ்ந்த, திருமணம் செய்த, பணியாற்றிய பள்ளிகளையும் பார்த்து அவர் நடந்த சுவடுகளில் நடந்து பசுமையான நினைவுகளை திருமலை கூற நான்மனதில் உள்வாங்கி கொண்டு சென்னை திரும்பினோம். 1965ல் திருச்செங்கோட்டில் சிலம்பொலி செல்லப்பன் நடத்திய கண்ணகி விழாவில், சென்னையிலிருந்து நா.பா.வுடன் அவரது "ஆஸ்டின் காரில் சென்று கலந்து கொண்டேன். அவ்விழாவில் டாக்டர் மு.வ. கவிஞர் கண்ணதாசனும் கலந்து கொண்டார்கள். திரும்பி வரும் பொழுது திரு ஒளவை நடராசனும் காரில் எங்களுடன் சென்னைக்கு திரும்பினார். | மீண்டும் தீபம் ஏஜென்சிநியமிப்பதற்காகவும், கோவையில் திரு.மு.வேலாயுதம் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காகவும் அதே காரில் சென்னையிலிருந்து