பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...t assissional H (57) வேலைபார்க்கும் சீனுவாசன், வாட்ச்மேன் போல அந்தக் கட்டிட வாசலில் படுத்திருப்பார். பிறகு இது நா.பா.வுக்குத் தெரிந்தது, அலுவலக சாவியையே என்னிடம் தந்து, உள்ே படுக்கச் சொல்லிவிட்டார். - 'தீபம் மேனேஜர் திருமலையும் பெரும்பாலும் அலுவலகத்திலேயே தங்க ஆரம்பித்தார். பிரஸ் சில் வெளி வேலைகள் வாங்கி, பாரங்களை மட்டும் அச்சிட்டோம். இதனால் பிரஸ் பிம் இரவில் இயங்கத்துவங்கியது எனக்கு வசதியாகப் போயிற்று. - தீபம் காரியாலயம் கிட்டத்தட்ட ஒரு சத்திரம் போல (இலக்கிய சத்திரம்) இருந்தது எனலாம். மலேசியா, இலங்கை, போன்ற இடங்களிலிருந்து தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் தமிழகம் வந்தால், சென்னையில், தீபம் அலுவலகத்திற்கு உரிமையுடன் வந்து தங்குவர். இதே போல், பம்பாய், கல்கத்தா போன்ற நகரங்களிலிருந்தும் பல எழுத்தாள அன்பர்கள் வந்து தங்குவர். சிலர் வாரக் கணக்கில் தங்கி, தங்கள் கதைத் தொகுதிகளை அல்லது கவிதைத் தொகுதிகளை அச்சிட்டு, நூல் வடிவிலாக்கி எடுத்துச் செல்வர். சில தமிழ்ச் சங்க மலர்களும் இப்படி இங்கு அச்சாகும். பம்பாய் தமிழ்ச்சங்கத்திற்காக ஏடு" என்றொரு இலக்கிய இதழ் 'தீபம் காரியலயத்தில் தயாரிக்கப் பட்டு, ம்ாதம் தோறும் அனுப்பப்படும். திருமலையும் நானும் இதன் பொறுப்புகளைக் கவனிப்போம். நானும் ஏடு இதழில் கதை, கவிதை எழுதியிருக்கிறேன். - 'தீபம்'அலுவலகத்தில் நான்சற்றேறக்குறைய பத்தாண்டுக் காலம் பணிபுரிந்தேன். ஆயினும் என் கதை ஒன்று கூட ‘தீபம்’ இதழில் இடம்பெற்றதில்லை. ஆரம்பத்தில் ஒரு சிறு கதை எழுதி, நா.பா.வின் மேஜை மீது வைத்தேன். அவர் மறுநாளே என்னைக் கூப்பிட்டு, இது போல் இனிக்கதை எதுவும் எழுதி இங்கு வைக்காதே, என்று கூறிவிட்டார். முதலில் என் மனம் மிகவும் வேதனைப்பட்டது. நாளடைவில் நான் மனச் சமாதானம் அடைந்ததுடன், நா.பா. நான் எதுவுமே எழுதக் கூடாது என்று கூறிவிடவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். . r . . . என் கதைகள் தீபத்தில் இடம் பெறாவிட்டாலும், ஒவ்வொரு மாதமும் தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்திலும்