பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிவண்ணனின் மாபெரும் சாதனை லெனின் கோவிந்தராசன் தீபம், நா.பார்த்தசாரதி அவர்கள் சிறந்த தேசப்க்தர். இலக்கிய உலகின் தலைசிறந்த படைப்பாளி. ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், வரலாற்றுக் கதைகள் எழுதி, வாசகர்களிடையே பேரும்- புகழும் பெற்றவர். பொன்விலங்கு, துளசிமாடம், மணிபல்லவம் என்று பலவற்றைப் படைத்து உள்ளார். ஆயினும் 1960களில் கல்கி இதழில் 'மணிவண்ணன் என்ற பெயரில் வாரந்தோறும் எழுதி வெளிவந்த குறிஞ்சிமலர் நாவல் என்னை மட்டுமின்றி, தமிழ் கூறும் நல்லுலகத்தில் உள்ள பல்லாயிரம் கணக்கான வாசகர்களை வசீகரித்த வரித்துக் கொண்டதலை சிறந்த நாவல் என்றால், அது மிகையாகாது. டாக்டர் மு.வ. அவர்களின் நாவலைப் படித்த வாசகர்கள் அவரது கதாபாத்திரங்களின் பெயர்களையே தங்களுடைய பிள்ளைகளுக்கு சூட்டியது போன்று குறிஞ்சிமலர் நாவலில் நா.பா. அவர்கள்படைத்திட்டநாயகன்-நாயகியான அரவிந்தன் -பூரணி பெயர்களைதன்பிள்ளைகளுக்கு சூட்டி மகிழ்ந்தார்கள். - அரவிந்தன்-பூரணி ஒரு இலட்சியபூர்வம்ான கற்பனைக் கதை என்றாலும் நா.பா. அவர்கள் அதனை லாவகமாகக் கையாண்டு வாராவாரம் வேகமும்-விறுவிறுப்புமாகக் கொண்டு சென்றதும் இனிய தமிழ் நடையில் இலக்கியச்சான்றுகள், பாரதி, பாரதிதாசன் கவிதைகள், பொன்மொழிகள் இவற்றை எல்லாம் கையாண்டு எழுதியதும் நாவலுக்கு மகுடம் சூட்டினாற்போல் இருந்தது. வாராவாரம் வரும் அத்தியாயத்தின் தலைப்பில், ஏதாவது ஒரு கவிதை அல்லது டொன்மொழிகள் இருக்கும். அது அத்தியாயத்தில் வர இருக்கின்ற பாத்திரங்களின் குணநலன் களைப் பிரதிபலிப்பதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, மண்ணில் உழைப் பாரெல்லாம் வறியராம் உரிமை கேட்டால் புண்மீது அம்புபாய்ச்சும் புலையர் செல்வராம் இதனைதன் கண்மீது பகலில் எல்லாம்கண் கொண்டு அந்திக்குப்பின் விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய்தம்பி