பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நண்பர் நா.பா.வின் நினைவில் எஸ். இராமசுப்ரமணியம். சீனியர் அட்வகேட், சென்னை. திரு. நா.பா.அவர்களை முதலில் நான்சந்தித்தது.1957 என்று ஞாபகம். மதுரையில் வக்கீல் தொழில் அப்பொழுது தான் ஆரம்பித்தேன். பொதுவான நண்பர் திரு.கே.பி. நாராயணன் வழியாக ஏற்பட்ட பழக்கம் வலுவான நட்பாக வளர்ந்தது. அடிக்கடி சந்தித்து உரையாடியும், வெளியூர்கள் சென்று மகிழ்ந்தும் பழகினோம். தொழிலில் வளர்ச்சி காரணமாக நான் 1958ல் சென்னை வந்தடைய நேர்ந்தது. திரு.நா.பா.அவர்களும் 'கல்கி" பத்திரிகையுடன் மேற்கண்ட தொடர்பு காரணமாக சென்னைக்கு வந்து சேர முடிந்தது. இவ்வாறு நடுவில் விட்டுப்போன தொடர்பு மீண்டும் 1960லிருந்தே வளரலாயிற்று. அதிலிருந்து கிட்டத்தட்ட ஒரு கால்நூற்றாண்டுக்கு எங்களுடைய நட்பு:உறவு நீடித்தது. . α . - நா.பா.வின் பழகும் முறை யாரும் விலகிச் செல்ல முடியாதபடி இருக்கும். 'கல்கி' பத்திரிகையில் முதலில் வெளியிலிருந்து எழுதிக் கொண்டிருந்தார். பிறகு, துணை ஆசிரியராகப் பணியாற்றினார். கடும் உழைப்பு என்றால் நா.பா. வைத் தான் குறிக்கும். பலதுறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பெருமை சேர்த்துக் கொண்டார். புதிதாக வந்திருந்த ஒளிபரப்பு (டிவி) துறையிலும் ஏற்கனவே இருந்து வந்த ஒலிபரப்பு (ரேடியோ) துறையிலும் பத்திரிகைத்துறை யிலும் தன் எழுத்துவன்மையையும் திறமையையும் வெளிப் படுத்திக் கொண்டே இருந்தார். அதே காலகட்டத்தில் சென்னைக்கு புதியவனாக வந்த எனது தொழிலும் முன்னேற்றம் காட்டியது. நேரம் கிடைக்கும் போது எல்லாம் சந்தித்து பேசி மகிழ்வோம். வெளியூர் செல்வதிலும், மதுரை கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு சென்றும் பொழுது போக்குவோம். தான் எழுதுவது அது எந்தத்துறையைப் பற்றி இருந்தாலும் சரியானதாக இருக்க வேண்டும் என்ற நா.பா.வுடைய உறுதி மிக குறிப்பிடவேண்டிய விஷயம். சட்டம், சங்கீதம், மருத்துவத் துறை போன்ற எதிலும் தான் எழுதுவது சரியானதா என்று