பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர் பண்புகளின் உருவகம் நா.பா. சுப.கோ. நாராயணசாமி 'குறிஞ்சி மலர் போல ஒர் அபூர்வமான மனிதர் திரு.நா.பார்த்தசாரதி அவர்கள், அன்பின் ஊற்றாகவும், ஆற்றலின் சின்னமாகவும், பண்பாட்டின்பாதுகாவலராகவும், நண்பர்களுக்கு உற்றுழிஉதவும்.உத்தமராகவும் வாழ்ந்து காட்டிய மாமனிதர்அவர். இலக்கிய தீபம் ஏந்தி தமிழ் மறுமலர்ச்சி இலக்கியத்திற்கு மகத்தானதொண்டு புரிந்ததுரயவர். பல இளம் எழுத்தாளர்களுக்கு வேடந்தாங்கலாக, நிழல் தந்த வித்தகர். . . . . தன்மானத்துடன் சிறுமை கண்டு பொங்கி பெருமையைப் போற்றிப் பத்திரிகையுலகில் ஓர் சாதனை புரிந்த உழைப்பாளி. உண்மை, நேர்மை, ஒழுக்கம் இம்மூன்றுமே அவரை வழி நடத்திச் சென்றன. பாரதி கூறிய திண்ணிய நெஞ்சம், தெளிந்த நல்லறிவு எண்ணியதை நிறைவேற்ற இறுதிவரை போராடுதல் என்ற வரிகளுக்கு இவரே இலக்கணம். - • இளம் வயது முதல் பல எழுத்தாளர்களின் படைப்புக் களைப் படித்து வந்தாலும் நான் முதலில் நேரில் சந்தித்த எழுத்தாளர் திரு.நா.பா.அவர்கள்தான். அடுத்து திருவல்லிக் கண்ண்ன் 1962இல் நேரில் பார்த்த இரண்டாவது எழுத்தாளர். 'கல்கி மாதச் சிறுகதைப் பரிசினைக் கொடுத்த 1956ஆம் ஆண்டு கால கட்டம். நா.பாவின் 'வலம் புரிச் சங்கு என்ற சிறுகதை பரிசு பெற்றது. இக்கதையைப் பாராட்டி முதல் கடிதம் எழுதினேன். பதில் எழுதினார். தொடர்ந்து கடிதப் பரிமாற்றங் கள் நிகழ்ந்தன. அவர் படைப்புக்கள் பற்றி விமர்சனம் செய்து எழுதுவேன். பதிலும் வரும் ஓராண்டு இவ்வாறு 1956 முதல் 1957 செப்டம்பர் வரை கடிதம் மூலமே தொடர்பு. இந்த ஒராண்டு காலம் நான் ஈரோட்டில் ஆசிரியப் பயிற்சி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். - - நான் ஆசிரியப் பயிற்சி முடித்து எனது சொந்த ஊரான நாச்சியார் பட்டியில் உள்ள பள்ளியில் பணியில் சேர்ந்தேன்.