பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@—{ఆళ్లి உலகின்நட்சத்திரம் தீபம்' நா.பார்த்தசாரதி) அலுவலத்தில் படுத்து விட்டு, காலை 5 மணி முதல்பேருந்தில் இருவரும் கிளம்புவோம். அவர் கிருஷ்ணன் கோவிலில், வற்றாயிருப்பு செல்ல இறங்குவார். நான்பூரீவில்லிபுத்தூர் வந்து ஊர் வருவேன். . . . 1958 இல் மதுரையில் எழுத்தாளர் சங்க மாநாடு மிகச்சிறப்பாக நடத்தினார். திரு.கி.வா.ஜ. அவர்கள் தலைமை தாங்கினார். எழுத்தாளர்கள் அகிலன், பகீரதன், ஏ.எஸ். ராகவன், சுகி.சுப்பிரமணியம், ஏ.ஜி.வெங்கடாச்சாரி, திருலோக சீத்தாராம், காரைக்குடிசா.கணேசன், ரகுநாதன், வ.விஜயபாஸ்கரன் ஆகிய எழுத்தாளர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள். எழுத்தாளர்மாநாட்டையொட்டி மலர் ஒன்றும் வெளியிட்டனர். 1958இன் இறுதியில் பள்ளியில் பணியாற்றிய நா.பாவை நீக்கிவிட்டனர். இதை எதிர்த்து வற்றாயிருப்பில் கண்டன ஊர்வலமும், கூட்டமும் நடந்தது. இக்கூட்டத்தில் "வளமான வற்றாயிருப்பில், மனவளமற்ற குறுகிய எண்ணம் கொண்ட மனிதர்கள் வாழ்கின்றனர் என்று பேசினார். உண்மையில் இவரது புகழைத்தாங்க முடியாத சிறுமதி படைத்தோர் செய்த கூட்டுச் சதியின் விளைவுதான் இவரது பணி நீக்கம் என்று கூறுவது பொருத்தமாகும். - . 1959 ஆரம்பத்தில் நா.பா. மதுரை சென்று விட்டார். பசுமலையில் அருள் நிலையம் என்ற வீட்டில் வசித்தார். 'குறிஞ்சிமலர் நாவல் எழுதும் பொழுதுதான் தமிழ்நாடு மட்டு மல்லாமல், கடல் கடந்த நாடுகளான இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் எல்லாம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். நாவல் வெளிவந்த பொழுதுநித்தமும் பாராட்டுக்கடிதங்கள்.குவியும். அப்போதைய பெண் அமைச்சர் லூர்தம்மாள் சைமன், குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.போன்றோர் மிகவும் பாராட்டி எழுதியிருந்தனர். மாலையில் குளித்துவிட்டு, ஊதுபத்தி கொளுத்தி வைத்து, அறையில் ஒர் உன்னதமான தூய சூழ்நிலையில் தான் அவர் பெரும்பாலும் இந்நாவலை எழுதுவார். உயர்ந்த கம்பீரமான நடை, புதுமையான உவமைகள், காட்சிகளையும், கதாபாத்திரங் களையும் உயிரோட்டத்துடன் சித்தரிக்கும் பாங்கு, இன்ன பிறவற்றால் அந்நாவல் ஓர் உன்னத இடத்தை பிடித்தது.