பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( வல்லிக்கண்ணன் } - - C/3D ஞாயிறு மலரில் கட்டுரை எழுதி வந்தார். அதைப்பற்றிக் கூற நா.பா. என்னையும் அழைத்துச் சென்றார். சரி, இனி அப்பெயரில் எழுதவில்லை என்றார் திரு. இராமகிருஷ்ணன். அப்பொழுது , அவர் சொன்னார். நா.பா. வரலாற்று ஆதாரங்களின் அடிப்படை யில் வரலாற்று நாவல் எழுதுவதை விட சிலப்பதிகாரச்சூழலில் பூம்புகார் நகரை அடிப்படையாக வைத்துக் கற்பனையாக ஒரு நாவல் எழுதுங்கள் என்றார். நா.பா.வும் 'சரி என்று சொன்னார். - 'மணிபல்லவம்' சரித்திர நாவல் படித்த பொழுதுதான், அவருக்கும் இந்தச் சிந்தனை உண்டு என்பதை அறிந்தேன். தமிழ் வரலாற்று புதினங்களில் ஓர் தனித்வம் பெற்ற நூல் இது. . சிலப்பதிகாரம், மணிமேகலை, நீலகேசி, குண்டலகேசி, இன்னும் பல தர்க்க நூல்களைப் படித்து இந்நாவலில் அவர் t கதாநாயகன் மூலமாகவும், பிற மாந்தர்கள் வழியாகவும் பல் வேறு சமயக்கருத்துக்களை வெளியிட்ட பாங்கு மிகச்சிறப்பான முயற்சியாகும். இது புதுமைத்தடம் பதித்தநுட்பமான புதினம். 'குறிஞ்சி மலர் நாவலில் ஒவ்வொரு அத்தியாயத்தின் முன்பும் ஓர் ஆழ்ந்த கருத்துள்ள பாடலை முன்வைப்பார். சங்க இலக்கியம் திருமூலர் பாடல், பாரதி பாடல், கவிஞர் எஸ்.டி.எஸ். யோகி பாடல் போன்றவை இடம் பெற்றன. இப் பாடல்களையும், மணி பல்லவ நாவலில் கூறப்பட்ட w தத்துவக் கருத்துக்களையும் கண்டு, இவரை வயதில் மூத்தவர் என்றே பலர் மனதில் எண்ணினர். பம்பாய் நகருக்கு இலக்கியச் சொற்பொழிவுகளுக்குச் சென்ற பொழுது, இவரது உருவம் கண்டு வியந்தனராம். சிலர்நம்ப முடியவில்லையே' என்றனர். இதை நா.பா. பேசிக் கொண்டிருந்த பொழுதுகுறிப்பிட்டார். 1960 ஜுலை மாதம் வற்றாயிருப்பில் இலக்கிய நண்பர்கள் சேர்ந்து புதுமைப்பித்தன் விழாவை நாள் முழுவதும் சிறப்பாக நடத்தினோம். விழா, அவர் பணியாற்றிய பள்ளியில் நடை பெற்றது. தொ.மு.சி.ரகுநாதன், தா.பாண்டியன், சிவகாமசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர். நான் நா.பா. அவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படிக்கடிதம் எழுதினேன். அவர் 'எனது சொந்த செலவில் வருகிறேன். நிச்சயமாக' என்று எழுதினார். அதுபோல ஞாயிறு விழாவிற்கு, சனி மாலையே வந்து விட்டார். நடைபெற்ற பட்டிமன்ற் நிகழ்ச்சியிலும் கலந்து