பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| வல்லிக்கண்ணன் H M - - (75D நா.பா. அவர்கள் சாப்பிடும் பொழுது விரைவாகச் சாப்பிடுவார். அவர் அருகில் அமர்ந்து உண்ணும் போது கவனித்துள்ளேன். ஒரு முறை ரசிகமணி டி.கே.சி. வீட்டில் மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். வழக்கம் போல விரைவுதான். நான் தயங்கியபடி "சார், கொஞ்சம் மெதுவாகவே சாப்பிடுங்கள்' என்றேன். அப்படியா, சரி பழக்கமாகி விட்டது இப்படி சாப்பிட்டு என்றார். - - நா.பா. பார்ப்பதற்கு ஒரு நடிகர் போல, கம்பீரமாக அழகாக இருப்பார். ஒரு முறை குற்றாலத்தில் டி.கே.சி. விழா முடிந்து, குளிப்பதற்குப் போய்க்கொண்டிருந்தோம். எண்ணெய் வாங்க கடைக்குச் சென்றேன். அங்கிருந்தவர்கள் 'என்ன சார், ஏதாவது இந்தி சினிமா சூட்டிங் நடைபெறுகிறதா? இவர் வட இந்திய நடிகர் போல இருக்கிறாரே " என்று கேட்டனர். அவ்வளவு கவர்ச்சியான தோற்றம். அவர் தோற்றம் பார்ப்பவர்களைக் களிப்புறச் செய்யும். அவர் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிதான் ஒளிவீசும். நம்மிடம் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அவரிடம் பேசினால் மறைந்துவிடும். சிலேடையாகவும் சில நேரங்களில் பேசி மகிழ்விப்பார், தமிழில் தொல்காப்பியம் முதல் நவீன மேத்தா வரை படித்தவர். எளிமையாகப் பேசுவார். - - சபையில் அவர் இருந்தாலே ஓர் தனி அழகுதான். ஒரு சமயம் கி.ராஜநாராயணன் எனக்கு எழுதிய கடிதத்தில்'பேஷ்! நா.பா. வருகிறாரா சபையே தனி கம்பீரமாக இருக்கும்" என்று எழுதினார். இக் கடிதம் பிரசுரமாகி வந்த அவரது கடிதத் தொகுப்பில் உள்ளது. - நா.பா.விடம் ஒரு நல்ல பழக்கம், யார் கடிதம் எழுதினாலும் உடன் பதில் எழுதிவிடுவார். எழுத்துக்கள்'முத்து முத்தாக அழகாக இருக்கும். எனக்கு அவர் எழுதிய 82 அஞ்சலட்டைக் கடிதங்களும் நீண்ட கடிதங்களும் உள்ளன. அவர் நினைவாகப் பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாத்து வருகின்றேன். . * - என்றும் அவர் இலக்கியத் தொண்டுகள் தீபமாகப் பிரகாசித்து, நம்மை வழிநடத்திச்செல்லும் -