பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@–@g உலகின் நட்சத்திரம் "தீபம்' நா. பார்த்தசாரதி) என்ற இன உணர்ச்சிக் கூட்டங்கள் -இவற்றை எல்லாம் நடத்திவிட முடியாது. ஏனென்றால் பணமுதலைகளின் காகித ஆலைகளில் விசுவாசமில்லாத வெறும் காசுக்காகத் தன் ஆன்மாவையே விற்றுவிடுகிறது. இந்த நாட்டு உழைக்கும் பத்திரிகையாளர்களில் பெரும்பாலோர்- அப்படி ஆன்மாவை விற்றுவிடுகிற காரணத்தினால் தங்களுக்குத் தாங்களே கல்லறை களாகித்தான் நடமாடுகின்றனர்! இந்த நிலையில் வேறு கல்லறைகளை நாடிப் போக அவசியம் ஏன்?. முதலாளிகள் தங்கள் காரியாலயத்தில் செய்கிற முதல் காலித்தனம்-ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள் - ஒருவருக்கொருவர் - ஒற்றுமை யில்லாமல் தனித் தனிக் குரூப்' களாகப் பிரிந்து விலகி நிற்கும்படி ஏற்பாடு செய்வது தான். இந்த ஏற்பாட்டை நேரடியாகவோ மறைமுகமாகவோ அவள்கள் திட்டமிட்டுச் செய்வார்கள். சிலருக்கு-அவள்கள், வால் பிடிப்பவர்களாகவோ, கூஜாத் துக்குகிறவர்களாகவோ இருக்கிறார்கள் என்பதற் காகவே காரியாலயத்தில் அதிக செளகரியங்களையும் சுக போகங்களையும் அளிப்பார்கள். வேறு சிலருக்கு அவர்கள் தன்மானத்திலும் சுதந்திர நோக்கிலும் - திடமாகக் காலூன்றி நிற்பவர்களென்ற காரணத்தினால் சில சாதாரண செளகரியங் களையும் வசதிகளையும் கூடச்செய்துதராமல் புறக்கணிப்பார்கள். பத்திரிகைக் காரியாலயத்தின் பேரில், காரியாலயச் செலவில் பெட்ரோல்-பழுது பார்க்கும் செலவுகள் போடப்படு வதாகக் கணக்கெழுதப்படும். கார்கள் பத்தோ-பனிரெண்டோ இருக்கும். ஆனால் காரியாலய உதவி ஆசிரியர்களோ, தொழி லாளர்களோதவறிக்கூட அவசர ஆத்திரத்திற்கு-விடாத மழைத் தொல்லை உள்ள நாட்களில் அல்லது ஓயாத வெயில் தகிக்கும் கோடை நாட்களில் இந்தக் காரியாலய வாகனங்களில் பயணம் செய்கிற அந்தஸ்தை அடைய முடியாது. இந்தக் காரியாலய வாகனங்கள் அதிபரின் மகள் வீட்டி லொன்றும், மைத்துணி வீட்டிலொன்றுமாக ஓடி உய்வித்துக் கொண்டிருக்கும். செலவுகள் ஆயிரம் ஆயிரமாகக் கர்ரியாலக் கணக்கில்-ஏழை எழத்தாளர்கள் எழுதியும்-பாட்டாளி அச்சுத் தொழிலாளிகள் பாடுபட்டு வளர்த்தும் உருவாக்கி அனுப்புகிற பத்திரிகை வருவாயில் நடைபெற்றுக் கொண்டிருக்கும். காரியாலயத்தைக் கவனித்துப் பாதுகாக்க என்று ஒரு டஜன்