பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

107



உடனே உருக்குமணி “நம்மைவிடச் சிறந்த அன்பு-காதல்-பக்தி பாமாவுக்கு ஏது? நாமே வெல்வது உறுதி” என்று எண்ணி இறுமாந்து நின்றாள்.

பாமா, கண்ணனைத் தியானம் செய்துகொண்டு பேசாமல் நின்றாள்.

ஒரு தராசு வரவழைத்தான் கண்ணன். “இந்தத் தராக நிரம்ப விலையுயர்ந்த பொருள் யார் வைக்கின்றாளோ அவளே சிறந்தவள்” என்றான் கண்ணன்.

உடனே உருக்குமணி, தள்ளிடமிருந்த நவமணி பதித்த அணிகலன் அனைத்தும் தராசில் குவித்தாள். தராசுத் தட்டுக் கீழே இறங்கவே இல்லை. பின்னர் பட்டுப்புடவைகள் விலையுயர்ந்த பண்டங்கள் உள்ளனவெல்லாம் வைத்தும் தராசுத் தட்டுக் குத்துக்கல்லாக அப்படியே இருந்தது.

மேலும் செய்வதறியாத உருக்குமனி தன் தோல்வியை ஒப்புக் கொண்டு பின் வாங்கினாள்.

அடுத்தது பாமாவின் முறை. பாமா ஏதுமே செய்யவில்லை. விலையுயர்ந்த அணிகலன்களைத் தேடவில்லை. அருகே வளர்ந்திருந்த ஒரு துளசி இலையைப் பறித்து, “கண்ணா! கண்ணா!” என்று கூறியவாறே தட்டில் வைத்தாள்.

என்ன அற்புதம். அவ்வளவு அணிகலன்களாலும் அசையாத தட்டு, துளசிஇலை பட்டவுடன் கீழே இறங்கி விட்டது.

அன்பு என்பது உள்ளத்துக்கு உரியது. வெளியில் காட்டுவதல்ல. என்ற உண்மையை இவ்வரலாறு நிரூபித்தது.

உருக்குமனியின் செருக்குப் பறந்தது. பாமாவிடம் கொண்ட பொறாமை அன்பாக மாறியது.

கண்ணன் கருடனை நோக்கி, அனுமனை அவன் இருந்த இடத்தில் விட்டுவிட்டு வா! என்று ஆணையிட்டான்.