பக்கம்:ஐந்திணை வளம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ஐந்திணை வளம் 5. நெய்தல் வளம் கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகிய நெய்தற் பகுதியிலே வாழ்ந்த நேரிழையோடு, துறைவன் ஒருவன் ஒழுகிவந்த ஒழுக்கத்தை உரைக்கும் பகுதி இது. ஐந்திணை ஒழுக்கத்தைத் தழுவி எழுந்த தமிழ்ச் செய்யுட்களுள், நெய்தல் செய்யுட்கள் உள்ளத்தைத் தொடுவனவாகவே பெரும்பாலும் விளங்கும். இதற்குக் காரணம், இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாக அமைகின்ற அதன் இயல்பே என்று கூறலாம். அவ்வகையிலே செறிவுடைமையோடு அமைந்தவை மூவாதியரின் இந்தச் செய்யுட்கள். 1. உயிருக்கு ஊதியம் நெய்தல் நிலப்பாங்கிலே, கடற்கரைச் சோலையிலே தம்முட் சந்தித்துக் களவிலே திளைத்து உறவாடி வந்தனர் தலைவனும் தலைவியுமாகிய இருவர். அவர்களுடைய களவுறவின் போக்கினைக் கண்டதலைவியின் தோழிக்கு, அந்த உறவு மனவமைதியைத் தரவில்லை. தலைவனின் நேர்மையிலே அவளுக்கு நம்பிக்கைபிறக்கவும் இல்லை. எனினும்,தலைவியின் உள்ளம் அவன்பாற்சென்றதனை அறிந்த அவள், தலைவியின் நலத்தைக் கருதி, அவளுக்குத் துணையாகச் செல்வதனையும் மேற்கொண்டு வருவாளாயினாள். இந்த நிலையிலே, ஒருநாள், தலைவியும் தோழியும் தலைவனைச் சந்திப்பதற்காகக் குறித்த இடத்திலே முன்னதாகவே வந்து அவன் வருகையை எதிர்பார்த்தவராகக் காத்திருக்கின்றனர். அவன் வருவதும் களவிலே திளைத்துத் திரும்புவதுமாகிய செயலினை ஏற்காத தோழி, அந்தச் சூழ்நிலைய்ைத்தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளுகின்றனள். 'தோழி! நாம் வந்து எவ்வளவு நேரம் ஆயிற்று? அவனை வரக்காணோம் என்பதனைக் கண்டாயல்லவா? அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/104&oldid=761784" இலிருந்து மீள்விக்கப்பட்டது