பக்கம்:ஐந்திணை வளம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ஐந்திணை வளம் “மூங்கிற் கணுக்களினின்றும் திரட்சிகொண்ட முத்துக்கள் கிடைக்கும் என்பார்கள். அதனைப்போன்று முத்துக்களைத் தருவது பெரிதான கடலும் ஆகும். முத்துக்களைத் தருகின்ற பெருங்கடலிடத்தே பொருள்களைக் கொள்வதற்காக வேண்டி நாவாய்கள் வந்து போய்க்கொண்டிருக்கும் அத்தகைய வளமான துறைக்கு உரியவன் நம் தலைவன்.” o "அவனை, நான், தாழைகளாற் சூழப்பெற்று விளங்குகின்ற கானற் சோலையினுள்ளாக, இன்று வரக் கண்டேன். கண்ட அப்போது 'அவனின்றியான் அமையேன்” எனத் தெளிந்திலேன், அதனால், அவனைப் பார்த்தும் பாராதது போலவே வீட்டிற்குத்திரும்பினேன்.” “நிலைபெற்ற உணர்வு இல்லாதவள் யான், அப்போது அங்ங்னம் நடந்துகொண்டவள், இப்பொழுதோ அவனின்றி யான் வாழுமாறில்லை என்பதனைத் தெளிவாக அறிகின்றேன். இனி, யான் யாது செய்வேனோ?” இவ்வாறு, தான் செயலழிந்த நிலையினை எண்ணியெண்ணித் தலைவி புலம்புகின்றாள். பண்டங்கொள் நாவாய்வழங்கும் துறைவனை என்பது,அவைபோல வருவதும் இன்பத்தைக் கொள்வதும் அகன்று போவதுமாக அவன் விளங்கியதனை உணர்த்துதல் காண்க. "முண்டகக் கானல்’ என்றது, அவர்கள் வழக்கமாகச் சந்தித்துக் களவிலே கூடி மகிழ்ந்திருந்த குறியிடம் 6. அயல்நெறி செல்லுங்கொல்? தலைவியின் களவுறவினாலே அவளுடைய உடலினும் செயலினும் ஏற்பட்ட புதிய மாற்றங்களைக் காணுகின்ற செவிலித்தாய்க்குத் தன் மகள் மீது ஐயம் ஏற்பட்டு விடுகின்றது. அதனால் அவள் வீட்டை விட்டு எங்கணும் வெளியே செல்லற்கியலாதபடி கட்டுக்காவலுக்கு ஏற்பாடு செய்து விடுகின்றாள். அதன்பின்,அவள்மனம்,தலைவியின் பருவமுகிழ்ப்பினை நினைந்து அவளுக்கு விரைவிலே தக்கான் ஒருவனைத் தேடி மணமுடித்து வைப்பதற்கான முயற்சிகளிலே ஈடுபடுகின்றது. நயமாகத் தன் கருத்தினைத் தலைவியின் தாய் தந்தைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/112&oldid=761793" இலிருந்து மீள்விக்கப்பட்டது