பக்கம்:ஐந்திணை வளம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ஐந்திணை வளம் அடும்பிவர் எக்கர் அலவன் வழங்கும் கொடுங்கழிச் சேர்ப்பன் அருளான் எனத்தெளிந்து கள்ள மனத்தான் அயனெறிச் செல்லுங்கொல் நல்வளை சோர நடந்து? 'அடும்பினது கொடிகள் படர்ந்தேறி விளங்கும் மணல் மேட்டிடத்தேநண்டினம் நடமாடியிருக்கும்வளைந்துசெல்லும் உப்பங்கழிகள் எங்கணும் விளங்கும். அத்தகைய வளநாட்டின் தலைவன் அவன். - 'அவன் தலைவிக்கு ஒருபோதும் அருளாது இருக்க மாட்டான். o அவன் அருளான் எனத் தெளிவுகொண்டுகேட்கின்றனை. அவன் அங்ங்னம் செய்யாத தகுதியினை உடையவன்.' 'நல்ல வளையல்களை அணிந்துள்ள இவள் சோர்வு அடையும்படியாக, அவன் கள்ளமனத்தனாகி, வேற்று நெறியினை நாடிச் செல்வானோ? என்று சொல்கின்றாள் தோழி. இந்தச் சொற்களுள் பொதிந்துள்ள உறுதிப் பாட்டினை அறிந்து நாம் வியக்கின்றோம். 'அவன் அயல் நெறிச் செல்லுங்கொல் எனக் கேட்கும் சொற்கள், செல்லான் என்ற உறுதியையும் நமக்குக் கூறுவதாகும். 'தலைவி அறத்தொடு நிற்றலைப் போலவே, தலைவனும் உறுதியுடன் இருப்பானோ என்ற ஐயம் செவிலித் தாய்க்கு ஏற்படுகின்றது நியாயமே. தன் மகளின் காதலன் அவள்பால் நிலையான அன்புடன், அவளை நெடிது பேணி நிற்கின்ற தகைமை உடையவனாதலை அவள் தெளிந்துகொள்ளல் வேண்டுமன்றோ. அவளது அந்த ஆர்வத்தையும், அது உறுதியென அவனது பெருந் தகைமையைக் காட்டித் தோழி கூறுவதையும் அறிந்து நாம் இன்புறல் வேண்டும். 7. தேர்மேல் வரும் தலைவனும் தலைவியும் களவுறவிலே ஈடுபட்டு அதன் கண்ணேயே முற்றவும் ஆழ்ந்து செல்லுகின்ற மனத்தினராகி ஒழுகிவருகின்றனர். களவுறவு கடிமணவுறவாக மலர்தல் வேண்டுமென விரும்பிய தோழி, பலகாலும் நேரடியாகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/114&oldid=761795" இலிருந்து மீள்விக்கப்பட்டது