பக்கம்:ஐந்திணை வளம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ஐந்திணை வளம் வண்ணகைப் பட்டதனை ஆண்மை எனக்கருதிப் பண்ணமைத் தேர்மேல் வரும். 'தன்னிலன் ஆயது, முன்போலத் தலைவிபர்ல் அவளது நல்வாழ்வைக் கருதித் துணையாக அமையும் தகுதியிலன் ஆயினான் என்பதனால், அஃதாவது, அவன் தன்னுடைய இன்பத்தை நாடுபவனாகக் களவிலேயே அவளைத் துய்த்துப் பெறுதலை விரும்பியவனாக வருகின்றானே அல்லாமல், பொறுப்புடைய இல்லற வாழ்வினை ஏற்றற்குத் துணிந்திலன் எனப்பழித்து உரைக்கின்றனள் தோழி. “கழிக்கால்களிலே நெய்தற்பூக்கள் மலர்ந்துள்ளன; அவற்றின் தண்ணென்ற மணமும் எங்கணும் கமழ்கின்றது; வளைந்து வளைந்து செல்லும் கடற்கால்வாய்களின் எம்மருங்கும் இந்த நெய்தல் மலர்களின் பெருக்கம் தோன்றாமல் இல்லை; இவற்றையுடைய குளிர்ந்த நீர்த் துறைக்கு உரியவன்தான் தலைவன்; அவற்றைக் காண்பவன் தான் அவன்; எனினும் அவற்றைப் பார்க்கும் அவனுக்குத் தலைவியின் கண்களைப் போல விளங்கும் அவற்றைக் கண்டதும் தலைவியின் நினைவு எழவில்லை. தலைவியைக்கலங்காதுபேண வேண்டும் என்கிற முயற்சிப்பாடும் தோன்றவில்லை; அதனால், அவன் அருளற்றவன்” இப்படிச் சுட்டிக் குறை சொல்ல நினைக்கின்றதோழி,நேரடியாகக்கூறாமல்,"கண்ணுறுநெய்தல் கமழும் கொடுங்கழித் தண்ணந்துறைவன் என்கின்றாள். இந்த உரைச்செவ்வியதுநயப்பாட்டினைநாமும் உணர்தல் வேண்டும். 'முன்பெல்லாம் அவளை நாடிநாடி ஓடிவந்தவன் அவன்; அவளது அருளைப் பெறுவதற்காகப் பணிமொழி கூறிவேண்டி நின்றவனும் அவன்; அவள் ஐயுற்றாளாக நின்னிற்பிரியேன்” எனச் சூளுரைத்து அவளைத் தெளிவித்துக்கூடிஇன்புற்றவனும் அவன்; இன்றோ, அவளை மறந்து திரிகின்றனன்; இதனால், 'அவன் தன்உணர்வு இல்லாதவன் போலும் என்று கருதிய தோழி, தன்னிலன்’ எனக் கூறுந் திறத்தையும் நாம் கருதி இன்புறல் வேண்டும். 'அவனைச் சான்றோன் எனக் கருதினோம். அவனோ பொய்ம்மை பலவுரைத்து நம்மை மயக்கி, நம் கன்னிமையழகினைக் கைக்கொண்டும் போயினான்; அவன் அருளின்றி நம் அழகு நலம் நமக்கு மீளவும் வருவதில்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/116&oldid=761797" இலிருந்து மீள்விக்கப்பட்டது