பக்கம்:ஐந்திணை வளம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 113 கடற்கரை நாட்டினன் நம் தலைவன். அவன், நமக்குச் செய்த கொடுமையினை இந்தப் பறவைகள் அறியா போலும்? 'நம்மை இன்புறுத்துதலை மறந்து, காட்டு வழியிடத்தைச் சேர்ந்தவனாகப் பொருள் தேடிவரச் சென்றான் அவன். நம்பால் அவனது அருளானது அவ்வாறு அற்றுப் போன அந்தச்செயலினைக்கண்டும், இவை, நமக்கு அநுதாபம் கொள்ளுதலை அறிய மாட்டாவோ? . முன்போல எழுந்து ஆரவாரிக்கின்றனவே? - தலைவியின் எண்ணப் போக்கினைத் தோழி புரியாமல் இல்லை, எனினும்,அவள் என்செய்வாள்?'அவற்றிற்கு ஏதடீநின் துயரை அறிகின்ற அறிவு?, என்று கூறினவளாகத் தலைவியை வீட்டை நோக்கி அழைத்துச்செல்லுகின்றாள் அவள். பிரிவுக் காலத்தே, பழைய இன்பக்காலத்துத் தொடர் புடையன பலவற்றையும் விளித்துப் புலம்பும் தலைமகளிரது உளப்பாங்கினைக் காட்டும் நயமான செய்யுள் இது. எறிசுருக்குப்பை இனங்கலக்கத் தாக்கும் எறிதிரைச் சேர்ப்பன் கொடுமை-அறியாகொல் கானகம் நண்ணி அருளற்றிடக்கண்டும் - கானலுள் வாழும் குருகு? 'கடலுள் துள்ளி விளையாடியிருந்த சுறாமீன்களை அவை கலங்குமாறு கரையிடத்தே எறிந்து ஆரவாரிக்கும் கடலலைகளைப் போலத் தன் இல்லிலே கன்னிமைப் பொலிவுடன் களித்துத் திரிந்த தன்னைத் தலைவனும் பிரிவெனும் செயலாற் கொடுமை செய்து போயினனே? எனக் கூறாமற் கூறுகின்றாள் தலைவி. 10. வண்ணந்தா என்கம்! தலைவியின் தனிமைத் துயரம் பெருகிப்பெருகி மிகுவதனையும், அதனைத்தாளமாட்டாத அவள் உருகி உருகி அழிவதையும் காணக் காணத் தோழியின் நெஞ்சத்தும் துயரம் படர்கின்றது. இவ்வளவு அருளற்றுப் போயின. அத் தலைவனுடன் இனிமேல் எவ்வகை உறவுமே நமக்கு வேண்டுவதில்லை என்று கூறும் வெறுப்புணர்வும் எழுகின்றது. எனினும்,தலைவியின் அழகினைக் கவர்ந்துபோகிய அவனைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/121&oldid=761803" இலிருந்து மீள்விக்கப்பட்டது