பக்கம்:ஐந்திணை வளம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஐந்திணை வளம் 1. குறிஞ்சி வளம் குறிஞ்சி நிலத்தவர்களிடையே நிகழ்ந்த களவுறவின் தொடர்பாக வளர்ந்த தலைவன் தலைவியரது உள்ளத்து நினைவுகளைக் கூறுவது இப்பகுதி. 1. இடை நின்ற புணை ஒரு தலைவனும் தலைவியும் தம்முள் தாமே கண்டு, காதலித்துக், களவு உறவிலேயும் கூடித் திளைத்து மகிழ்ந்து வருகின்றனர். இருவரும் மலைநாட்டைச் சேர்ந்தவர்கள். மலைநாட்டுக் குன்றவரிடையே மதிப்புடன் விளங்கிய பெருங்குடியினைச் சேர்ந்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். பொதுவாகக்குன்றவர்குலத்தாரிடையே அந்தநாளிலே நிலவிய பழக்க வழக்கங்கள் இந்தக் கூட்டுறவுக்கு ஒரளவு உதவியாக இருந்தன. குலமரபுப்படி, அவள், தன் தோழியருடன் தினைப்புனங் காவலுக்குச் சென்றாள்; அவனும் தன் குலமரபுப்படி காட்டிடத்தே வேட்டையாடச் சென்றான். அங்கேதான் இவர்கள் சந்தித்தனர். o ஊழின் வலிமை பெரிது. உழுவலன்பின் தொடர்போ மிகவும் நெருக்கமானது. அதனால், அவர்கள் தம்முள் தாமே ஒருவரை ஒருவர் காணவும், கண்டதும் ஒருவர்பால் ஒருவர் உள்ளத்தை இழந்து பித்தாகிநிற்கவும் நேரிட்டது. பருவத்தினது மலர்ச்சியுடனும், குடும்பத்தினது செழுமையினாலேபோற்றிவளர்க்கப்பட்டகொழுமையுடனும், இயற்கையின் அருளாலே வந்தடைந்த எழிலின் மிகுதியுடனும் அவள் அங்கே அணங்கென நின்றிருந்தாள். அவளுடைய உருவந்தான் அவனை முதலில் கவர்ந்தது என்றாலும், அந்தக் கவர்ச்சியுடன் மட்டுமே அவனது காதல் வேகம் நின்றுவிடவில்லை. உழுவலன்பினது நெருக்கத்தால், அவன் உயிர் அவளை நாடிச் சென்று அவளோடு கலந்து விட்டது. அவன்நிலைதளர்ந்துநின்றான். அவளையேநினைத்தான். வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/14&oldid=761813" இலிருந்து மீள்விக்கப்பட்டது