பக்கம்:ஐந்திணை வளம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் க்ேசிகன் - 9 பேச்சைத்தொடங்குகின்றாள் அவள் அவளுடைய சொற்கள் தாம் எவ்வளவு ஆழமாகப் பொருள் பொதிந்தவையாக விளங்குன்றன: - 'தோழியரோடு பொருந்தி, மலைச்சாரலிடத்தே பசுமையான பயிரைப்போலக் கவர்ச்சியுடன் விளங்கிய தலைவியைப் புனங் காவலர் அறியாதே, களவிலே துய்த்து இன்புற்றவனே! என்று சொல்லாமற் சொல்லும் தோழியது அறிவுநுட்பத்தை என்னென்பது? “விளங்கும் அணிகளைக் கொண்ட தலைவிக்கும் நினக்கும் இடையே யான் புணையாக நின்றதை மறந்து விடாதே" என்று மட்டும் சொல்லி அமைகின்றாள் அவள். "இருவருக்கும் இடையிலே புணையாக நின்று கூட்டுவித்த உதவியை மறந்துவிட வேண்டாமாம். அதற்கு நன்றியாக, அவளை விரைவில் மணந்துகொண்டு, அவள் கவலையைப்போக்குதல் வேண்டுமாம்” குறிப்பாக இப்படியும் வலியுறுத்துகின்றாள் அவள். இளமைப்பருவத்தாரிடையே நிகழ்கின்ற இந்த நயமான உறவையும், அதன் முத்தாய்ப்பாக அமைந்த தோழியது இந்தச் சொற்களையும், அதனை உணர்ந்து நின்ற தலைவனது அறிவு நலத்தையும் எண்ணும்போது, மூவாதியரின் உள்ளத்தே இன்பவுணர்வு பொங்குகின்றது. அவர் பாடுகின்றார், அவரை பொருந்திய பைங்குரல் ஏனல், கவரி மடமா கதூஉம், படர்சாரல் கானக நாட! மறவல், வயங்கிழைக்கு யான், இடைநின்ற புணை. தோழியின் பேச்சினை இப்படி அழகாகச் செய்யுளாக்கி இன்புறுகின்றார். அரிதான அந்த நயம், நம் நினைவுகளை அந்தக் காட்சியோடு கலந்துநின்று வியக்கத்துண்டுகின்றது. "அவரை பொருந்திய கதிரையுடைய பசுந்தினையைக் , கவரி மடமாகதுவாநின்ற, படர்ந்த சாரலினையுடைய கானக நாடனே வயங்காநின்ற அணியினை உடையாளுக்கு யான் நடுவுநின்ற புணையினை மறவாது நினைப்பாயாக" என்பது செய்யுளின் பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/17&oldid=761816" இலிருந்து மீள்விக்கப்பட்டது