பக்கம்:ஐந்திணை வளம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-e புலியூர்க் கேசிகன் 15 “இலைகள் அடர்ந்துள்ள, குளிர்ந்த காட்டு மல்லிகைக் கொடிகள் பொருந்தியுள்ள சோலையிடத்தே,கொத்தாகவுள்ள காந்தட்பூவினிடத்தே, வண்டினம் ஆரவாரிக்கும் தன்மையினை யுடைய மலையகத்திலிருக்கும் நின் தலைவனது நாடு; அந்த நாட்டிற்கு உரியவனாகிய நின் காதலனும் நம் வீட்டிற்கு இன்று வந்தான். அவன் வரைவோடு வந்தது நினக்கு நல்லதோ இல்லையோ, நம் அன்னை ஓர் இளைஞனைத் தேடி வருந்திய வருத்தம் எல்லாம் இன்றோடுபோயிற்று”என்கின்றாள்தோழி. மூவாதியர், இந்தக் காட்சியிலே உள்ளத்தை இழந்து விடுகின்றார். காட்சிகவியாக எழுகின்றது. - 'அன்னை அலையும் அலை போயிற்று இன்று' என்பதால், அன்னையர் தம் மகளிரின் மணவினை நிகழ்வு குறித்து மிகவும் கவலையோடு திகழ்வரென்பது விளங்கும். பூக்களிலே மல்லிகைப்பூவிற்கு ஒரு தனித்தன்மை உண்டு. அதன் நறுமணம் இன்பவேட்கையை கிளர்ந்தெழச் செய்யும் என்பார்கள். இங்கே, தலைவனுடைய இன்ப வேட்கை மிகுதியைக் குறிப்பவள், இலையடர் தண் குளவி ஏய்ந்த பொதும்பில் என்கின்றாள். காந்தள் மலர்கிறது; அதன் தேனை வண்டினம் ஆரவாரத்தோடு சென்று நுகர்கின்றது. அவ்வாறே மணம் பெறும் தலைவியைக் கூடித்தலைவனும் இன்பத்தை நுகர்வான் என்பதும் குறிப்பாக இதன்கண் சொல்லப்படுகின்றது. தலைவியிடம் தோழி சொல்லுகின்ற இந்த காட்சியைக் கற்பனை செய்து அநுபவித்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான்,இந்தச் செய்யுளின் பொருள் பொதிந்த நயச் செறிவு நமக்குப்புலனாகும். 4. யாமாகப் பிரியோம் தலைவியின் உள்ளப் பாங்கினை விளக்குகின்ற காட்சியொன்றையும் நமக்கு மூவாதியர் காட்டுகின்றார். சுவையான இந்தக் காட்சியிலே, தமிழ்க்குடி மகளிரின் தகைசிறந்த கற்புநெறி சுடரிட்டு ஒளிவீசுகின்றது. தலைவியும் தோழியும் சோலைப்புறமாகத் தனியே போய்க்கொண்டிருக்கின்றனர். தலைவியின் காதலையும் களவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/23&oldid=761822" இலிருந்து மீள்விக்கப்பட்டது