பக்கம்:ஐந்திணை வளம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ஐந்திணை வளம் பார்க்கின்றாள். அந்த வேறுபாட்டினை உணர்த்துவாள் போலத்,"தடம் மென்பணைத்தோளி' என்று அழைக்கின்றாள். 'பெரிதான, மென்மை வாய்ந்த, மூங்கிலையொத்த தோளினை உடையாய் இதோகானத்தைச்சற்றே பார். மடப்பம் வாய்ந்த நடையினை உடைய மயில் அகவுகின்றதையும் கேளாய்! 'அந்த அகவுதலுக்கு இரங்கிக் கடல் நீரை முகந்து கொண்டு, மின்னலுடனே வந்த, அழகிய கார் மேகங்களையும் காணாய். ‘என் நிலையையும் பார். என்னைவிட்டுச் சென்றவரும் வாரார் ஆயினர். என் புலம்பலுக்கு இரங்குவாராய் வந்து, எங்ங்னம் உள்ளாய் என்று கேட்பவரும் இல்லை. நான் எப்படி ஆற்றியிருப்பேன்?, தோழிக்குத் தன்னுடைய நிலைமையை இப்படிக் கூறுகின்றாள் தலைவி. . . " தடமென் பணைத்தோளி! நீத்தாரோ வாரார் மடநடை மஞ்ஞை அகவக்-கடன்முகந்து மின்னோடு வந்த தெழில்வானம்; வந்தென்னை என்னாதி என்பாரும் இல். என் ஆதி-என்னதான் ஆகின்றனையோ? யாருமற்ற தனியளாகி விட்டதாகக் கூறித் தன்னை நொந்துகொள்ளுகின்றாள் தலைவி. அவளுடைய மனநிலையின் சிறந்தவெளிப்பாடுஇதுவாகும். - 3. கொல்லுநர் போல வரும் தோழி மீண்டும் தலைவிக்குத் தேறுதல் உரைப்பதில் ஈடுபடுகின்றாள். தலைவியோ சற்றும் தெளிவு கொள்வதற்கின்றி மேலும்வெதும்புகின்றாள். தோழி! இந்த மாலைக் காலத்தைப் பார்த்தாயோ? எவ்வளவு சிறுமைக் குணத்தினை உடையதாக இருக்கின்றது. முன்பெல்லாம் என்னையும் என் காதலரையும் இன்பவெள்ளத்திலே திளைக்கச் செய்த அதே மாலைக் காலந்தானேடி இது! இன்று, அவரைப் பிரிந்து தனிமை யுற்றிருக்கின்ற என்னிடம்தான் இதற்கு என்னபகை? இவ்வளவு சிறுமைக்குணத்தைக்கொண்டதாக இருக்கிறதே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/46&oldid=761847" இலிருந்து மீள்விக்கப்பட்டது